எமது பிரபஞ்சம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதை உறுதி செய்துள்ள வானியல் ஆய்வாளர்கள், ஆனால், எதுவும் விரைவில் நடந்துவிடாது என்றும் உறுதி செய்திருக்கிறார்கள்.
அழிந்து வருகிறது பிரபஞ்சம் |
உலகின் மிகவும் சக்தி மிக்க தொலைநோக்கிகளை பயன்படுத்தி இரண்டு லட்சம் நட்சத்திரக் குழுமங்களை கண்காணித்த அவர்கள், கடந்த இரண்டு பில்லியன் ஆண்டுகளில் பிரபஞ்சம் வெளியிடும் சக்தி அரைவாசியாக குறைந்துள்ளது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
புதிய நட்சத்திரங்கள் பிறக்கும் வேகமும் குறைந்து வருவதாக கூறும் பழைய ஆய்வுகளையும் அவர்கள் உறுதி செய்துள்ளனர்.
14 பில்லியன் ஆண்டுகள் பழமையான எமது பிரபஞ்சத்தின் விதி முடிய காலம் இருக்கிறது என்றும், ஆனால், அது நிரந்தரமற்றது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.