விண்வெளியின் வாசம் எதைப் போல் இருக்கும் | scitamil.blogspot.in



புவியில் உள்ள வாசனைகளை நீங்கள் நன்று அறிந்திருப்பீர்கள், ஆனால் இதுவே விண்வெளியின் வாசம் எதைப் போல் இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? விண்வெளி வீரர்கள் விண்வெளியில் நடக்கும் போது ஒரு மயக்கமடையக்கூடிய வாசனையை உணர்ந்தனர். நாசாவின் விண்வெளி வீரரான ‘டான் பெட்டிட்’ ஒரு உலோக உணர்வினை ஏற்படுத்திய அந்த வாசம் வெல்டிங் செய்யும்போது ஏற்படும் தீப்பொறி போன்று இருந்ததாகத் தெரிவித்தார். மற்ற வீரர்கள் அதனை கருகிய இறைச்சியின் வாசம் போல இருந்ததாகக் கூறினர்.அவர்கள் உணர்ந்தது ‘பாலிசைக்கிளிக் அரோமேட்டிக் ஹைடிரோகார்பன்’களாக இருக்க வேண்டும், ஏனென்றால் அவை தான் நட்சத்திரங்கள் அல்லது கோள்கள் உருவாகும்போது வெளிப்படக் கூடியவை.
நமது பால்வழியில் சாகிட்டாரியஸ் பி2 எனப்படும் தூசிகளால் ஆன மேகங்களின் வழியே 26,000 ஒளி ஆண்டுகள் நீங்கள் பயணித்தால், ராஸ்பெர்ரி எனும் பழவகையின் நறுமணத்தினைப் பெறலாம் அல்லது அவை ‘ரம்’ (மதுபானம்) போன்ற வாசத்தைக் கூட கொடுக்கலாம். அதற்குக் காரணம், [scitamil]அந்த மேகங்களில் எத்தில் ஃபார்மேட் எனப்படும் எஸ்டரின் வகை அடைக்கப்பட்டிருக்கும், அவை இது போன்ற மதுபானத்தினைப் போன்ற மணத்தைக் கொடுக்கும்.விண்வெளியில் மதுபானங்களே கிடையாது, ஆனால் அத்தகைய வாசனையை அவை கொடுக்கவல்லது. ஒரு வேளை அங்கு மதுபானங்கள் இருப்பதாக எடுத்துக்கொண்டால் ‘அக்குய்லா’ எனப்படும் விண்மீனில் இருந்து மட்டும் சுமார் 400 டிரில்லியன் டிரில்லியன் பின்ட்ஸ் (ஒரு லிட்டர் = 2.11338 பின்ட்ஸ்) நிரப்ப முடியும் [scitamil]