உலகம் வெப்பமடைதல் உண்மையே! - 97 விழுக்காடு அறிஞர்கள் ஒப்புதல் | Scitamil.blogspot.in


பொதுவாக நம்மிடம் உலகம் வெப்பமடைகிறது என்னும் கருத்தில் ஆராய்ச்சியாளர்களிடம் முரண்பாடான கருத்துக்கள் இருப்பதாக எண்ணம் உண்டு. ஆனால் அவ்வாறு இல்லை உலகம் வெப்பமடைவதும், அது மனிதனின் செயல்பாடுகளினால் தான் எனவும் அண்மையில் விஞ்ஞானிகளிடம் நடந்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரிய வருகிறது.

 காலநிலை மாற்றங்களை பற்றி நடத்தப்பட்ட சுமார் 12000 ஆய்வு அறிக்கைகளை தேர்ந்தெடுத்து கருத்துக்களை அறிய அறிவியலாளர்கள் முயற்சி செய்தனர். அதில் 4000 ஆய்வுகள் உலகம் வெப்பமடைவதைப்பற்றியும், அதனால் புவியின் காலநிலைகள் மாற்றமடைவதைப் பற்றியும் நேரடியான கருத்துகளை தெரிவித்திருந்தது. இதில் 97.1 விழுக்காடு அறிஞர்கள் உலகம் வெப்பமடைவது உண்மையே என கூறியுள்ளனர். மேலும் இந்த ஆய்வுகளை மேற்கொண்ட 8500 அறிஞர்களை தொடர்பு கொண்ட போது அதில் 1200 அறிஞர்கள் பதிலளித்தனர். இதில் 97.2 விழுக்காடு ஆய்வாளர்கள் உலகம் வெப்பமைகிறது என்றும், அதற்கு மனிதர்களின் செயல்பாடுகள் தான் காரணம் என்கின்றனர்.
[scitamil]

 இதில் மாற்று கருத்துக்கள் உடைய மிக குறைவானவர்களே. எனவே உலகம் வெப்பமடைதலும், அதனால் காலநிலைகளை மாறுபடுவதும் உண்மை என கூறலாம்.
[scitamil]