சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்களும் ஆச்சர்யங்களும்!




பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் 
பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன.. 
Centre Point of World’s Magnetic Equator. 

எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் 
எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற 
உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் 
மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?

இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி 
எப்படிப்பட்டது..?புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..?திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்து
கொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..
வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த 
கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல்,கணிதவியல், மருத்துவவியல் குறித்த 
ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, 
அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில 
அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில 
அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்...!

விண்வெளியின் வாசம் எதைப் போல் இருக்கும் | scitamil.blogspot.in



புவியில் உள்ள வாசனைகளை நீங்கள் நன்று அறிந்திருப்பீர்கள், ஆனால் இதுவே விண்வெளியின் வாசம் எதைப் போல் இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? விண்வெளி வீரர்கள் விண்வெளியில் நடக்கும் போது ஒரு மயக்கமடையக்கூடிய வாசனையை உணர்ந்தனர். நாசாவின் விண்வெளி வீரரான ‘டான் பெட்டிட்’ ஒரு உலோக உணர்வினை ஏற்படுத்திய அந்த வாசம் வெல்டிங் செய்யும்போது ஏற்படும் தீப்பொறி போன்று இருந்ததாகத் தெரிவித்தார். மற்ற வீரர்கள் அதனை கருகிய இறைச்சியின் வாசம் போல இருந்ததாகக் கூறினர்.அவர்கள் உணர்ந்தது ‘பாலிசைக்கிளிக் அரோமேட்டிக் ஹைடிரோகார்பன்’களாக இருக்க வேண்டும், ஏனென்றால் அவை தான் நட்சத்திரங்கள் அல்லது கோள்கள் உருவாகும்போது வெளிப்படக் கூடியவை.
நமது பால்வழியில் சாகிட்டாரியஸ் பி2 எனப்படும் தூசிகளால் ஆன மேகங்களின் வழியே 26,000 ஒளி ஆண்டுகள் நீங்கள் பயணித்தால், ராஸ்பெர்ரி எனும் பழவகையின் நறுமணத்தினைப் பெறலாம் அல்லது அவை ‘ரம்’ (மதுபானம்) போன்ற வாசத்தைக் கூட கொடுக்கலாம். அதற்குக் காரணம், [scitamil]அந்த மேகங்களில் எத்தில் ஃபார்மேட் எனப்படும் எஸ்டரின் வகை அடைக்கப்பட்டிருக்கும், அவை இது போன்ற மதுபானத்தினைப் போன்ற மணத்தைக் கொடுக்கும்.விண்வெளியில் மதுபானங்களே கிடையாது, ஆனால் அத்தகைய வாசனையை அவை கொடுக்கவல்லது. ஒரு வேளை அங்கு மதுபானங்கள் இருப்பதாக எடுத்துக்கொண்டால் ‘அக்குய்லா’ எனப்படும் விண்மீனில் இருந்து மட்டும் சுமார் 400 டிரில்லியன் டிரில்லியன் பின்ட்ஸ் (ஒரு லிட்டர் = 2.11338 பின்ட்ஸ்) நிரப்ப முடியும் [scitamil]

ஒவ்வொரு மனிதனிடமும் ஒவ்வொரு உலகம் | Scitamil.blogspot.in

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் உண்மையில் ஓர் தனி உலகம் என்பது உங்களுக்குத் தெரியுமா…? [scitamil]ஒவ்வொரு மனிதனிலும் நமது கண்களுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் எனப்படும் Microorganisms வாழ்ந்து வருகின்றன. இவை நுண்ணோக்கியின் (Microscope) உதவியுடன் மட்டும் பார்க்கக் கூடிய, தனிக் கலம் (Single Cell) அல்லது கூட்டுக் கலங்களால் (Multicellular) ஆன உயிரினங்கள் ஆகும். இவற்றை தீ நுண்மம் (வைரசு, Virus), கிருமி (Bacteria), பூஞ்சை (Fungi) மற்றும் மூத்தவிலங்கு (Protozoa) என்று முக்கிய நான்கு வகையாகப் பிரிக்கலாம்.[scitamil]
பெரும்பாலான நுண்ணுயிரிகள் ஆபத்தானவை என்றாலும், அவற்றுள் சில, மனிதனுக்குப் பயனுள்ளதாகவும் இருக்கின்றன. உதாரணத்திற்கு வைரசுகள் மற்றும் கிருமிகள் பலவிதமான நோய்களுக்குக் காரணமாக இருந்தாலும், மனித உடலில் வாழும் அனைத்து கிருமிகளும் நமது உடலின் செயல்பாட்டுக்கும் மற்று நாம் உயிர் வாழ்வதற்கும் உதவுகின்றன. 

சரி, நமது உடலில் எத்தனை நுண்ணுயிரிகள் வாழ்கின்றன என்று தெரியுமா? நீங்கள் நினைப்பது போல் நூறு அல்லது ஆயிரம் இல்லை. பல கோடி கோடி (> 1.000.000.000.000.000) நுண்ணுயிரிகள் நமது உடலில் மற்றும் உடலினுள் வாழ்கின்றன என்பது தான் உண்மை! குறிப்பாக கிருமிகளை எடுத்துக்கொண்டால், புவியில் காணப்படும் கிட்டத்தட்ட 3.000.000 கிருமி வகைகளில், நமது உடலில் குறைந்தது 10.000 கிருமி வகைகள் வாழ்கின்றன! உதாரணத்திற்கு நமது வாயினுள் மட்டுமே 10 கோடிக்கும் அதிகமான கிருமிகள் வசிக்கின்றன. இதனுடன் ஒப்பிடும் போது, நமது குடலில் வாழும் கிருமிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருக்கின்றது. இதில் வியப்பூட்டும் விடயம் என்ன தெரியுமா? நமது உடலில் வாழும் அனைத்து கிருமிகளையும் ஒன்றாக எடுத்து ஓர் தராசில் வைத்துக்கொண்டால், அதன் நிறை 2 kg ஆக இருக்கும். மேலும் நமது உடலின் 99,9 சதவீதமான இடங்களில், நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.[scitamil]

விண்வெளி வாழ்க்கை - சில சுவாரஸ்யமான உண்மைகள்! | scitamil.blogspot.in



சாதாரண மனிதனுக்கு விண்வெளியின் வாழ்க்கையை அனுபவிக்கும் வசதி எளிதில் கிட்டுவதில்லை. விண்வெளி ஆய்வாளர்கள் அல்லது விண்வெளி வீரர்கள் மட்டுமே இந்த அனுபவங்களை சில நாட்களுக்கு தங்களுடைய விண்வெளி பயனத்தின் ஒரு பகுதியாக [scitamil]
பெறும் வல்லமை பெற்றவர்களாக உள்ளனர். நாம் விண்வெளியில் உயிரினங்கள் வாழ முடியாது என்று பந்தயம் கட்டினாலும், அங்கு சென்று சாகசங்கள் செய்ய பலரும் தயாராக உள்ளனர். இந்த சாகச பயணங்களை செய்ய வேண்டாம் என்று கருதுபவர்கள், விண்வெளி வாழ்க்கை பெற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளவாவது விரும்புவர்கள். இங்கே விண்வெளி வாழ்க்கையைப் பற்றி சில விந்தையான ஆர்வமூட்டும் தகவல்களை உங்களுக்காக ..[scitamil]
சூரிய உதயங்கள்! 
நீங்கள் விண்வெளியில் இருக்கும் போது 90 நிமிடங்களுக்கு ஒருமுறை சூரிய உதயத்தை பார்க்க முடியும். இதனால் தான் விண்வெளி வீரர்களின் தூக்கத்தில் ஏராளமான பிரச்னைகள் உருவாகின்றன. சாதாரணமாக இருக்கும் பகல் மற்றும் இரவு வேளைகள் இல்லாததால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. சர்வதேச விண்வெள தளத்தின் நிர்வாகிகள் இந்த பிரச்னைக்கு ஒரு புதுமையான தீர்வு கண்டுள்ளனர். அவர்கள் விண்வெளி வீரர்களுக்காக 24 மணி நேர அட்டவணையை தயார் செய்துள்ளனர். பூமி நேரத்தை அடிப்படையாக கொண்ட இந்த கால அட்டவணைப்படி அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள்.


உடற்கூறு மாற்றங்கள் 
விண்வெளியில் உள்ள மிகவும் குறைந்த புவிஈர்ப்பு விசை காரணமாக நமது முதுகெலும்பு பூமியில் பெற்று வரும் தொடர்ச்சியான அழுத்தம் விடுபட்டு விடும்.[scitamil] அதன் காரணமாக விண்வெளி வீரர்களின் முதுகெலும்பு நேராக நிமிர்ந்து, சுமார் 2.25 அங்குல அளவிற்கு அவர்களுடைய உயரம் அதிகரிக்கும். விண்வெளி சுகவீனம் விண்வெளிக்கு சென்று விட்டு திரும்பும் வீரர்களின் உடல் நிலை 2-3 நாட்களுக்கு சுகவீனமாக இருக்கும். விண்வெளியில் குறைவான புவிஈர்ப்பு விசை இருந்ததான் காரணமாகவும் மற்றும் விண்வெளிக்கு யார் சென்றாலும் ஏற்படும் சாதாரண விஷயமாகவும் இது உள்ளது.

தூக்கம் 
விண்வெளிக்கலத்தில் தூக்கம் என்பது ஒரு சிக்கலான விஷயமாகும். விண்வெளியில் சிறிது நேரமாவது தூங்க நினைக்கும் விண்வெளி வீரர்கள் கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். அவர்கள் தங்களை ஒரு பட்டைக்குள் புகுத்திக் கொண்டு - மிதப்பதையும், மற்ற பொருட்களுடன் மோதுவதையும் தவிர்த்துக் கொண்டு தூங்குவார்கள். ஆடை அணிகள் விண்வெளியில் ஒவ்வொருவருடைய ஆடை அணிகலன்களை சரி செய்வது என்பது சவாலான காரியம் தான்.[scitamil] விண்வெளி வீரர்கள் தங்களுக்கான பிரத்யோகமான உடைகளை கொண்டு சென்று, கலத்தின் சுவர்களில் உள்ள லாக்கர்களிலும், பிற பொருத்தும் இடங்களிலும் வைப்பார்கள். துங்களுடைய முடிகளை அலசுவதற்கு அவசியம் இல்லாத ஒரு வகையான ஷாம்பூவை கொண்டு சுத்தம் செய்வார்கள். உணவுப் பழக்கங்கள் விண்வெளியில் புவிஈர்ப்பு விசை குறைவாக இருப்பதால் உப்பு மற்றும் மிளகு போன்றவற்றை தெளிக்க முடியாது. எனவே அவர்கள் திரவ உணவுகளை சாப்பிடுகிறார்கள். திட உணவுகள் மிதந்து சென்று ஏதாவது ஒரு இயந்திர பகுதிக்குள் சிக்கிக் கொள்ளவோ அல்லது விண்வெளி வீரரின் கண்களை தாக்கவோ வாய்ப்புகள் உள்ளன. 
காஸ்மிக் கதிர்வீச்சுகள் 
கருமையான விண்வெளியின் பரந்த வெளி பரப்பில் நீல நிறத்தில் காட்சியளிக்கும் பூமியை விண்வெளி வீரர்களால் காண முடியும். மேலும், அவர்கள் நிலவின் பின் பகுதியை பார்க்கவும், நிலவில் பட்டுத் தெறிக்கும் வித்தியாசமான வெளிச்சங்களை அவர்களுடைய கருவிழிகளால் உணரவும் கூடிய அனுபவங்களை பெற்றிருப்பார்கள். மூளையில் என்ன நடக்கும்? அறிவியலாய்வாளர்கள் எவ்வளவு தான் பரிசோதனைகள் செய்து விண்வெளி வீரர்களின் அழுத்தத்தை தாங்கும் திறன்களை சோதித்தாலும், நீண்ட நாட்களுக்கு விண்வெளியில் பயணம் செய்ய நேரிட்டால் மூளை பாதிக்கப்படும் என்பதை மறுக்க முடியவில்லை. ஏனெனில், விண்வெளியில் உலவி வரும் காஸ்மிக் கதிர்கள் மூளையைத் தாக்க வல்லவையாகும். கழிப்பறைகள் விண்வெளியில் கழிப்பறைகளை பயன்படுத்துவது என்பது சவாலான காரியம் தான். பல்வேறு விண்வெளி ஆய்வு நிறுவனங்களம் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு காணும் பொருட்டாக பல மணி நேரங்களை செலவிட்டுள்ளன. முன்னதாக, விண்வெளி கழிப்பறைகள் காற்றை அடிப்படையாக கொண்டு இயங்கி வந்தன. எனினும், தற்போதைய ஏர் பில்டரிங் முறையும் முன்பையொத்த முறையாகவே உள்ளது.[scitamil]
மீண்டும் பூமி வாழ்க்கை... 
விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பிய பின்னர், பூமியின் புவிஈர்ப்பு விசையுடன் பழகுவதற்கு நெடுநேரம் எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் விண்வெளியில் பொருட்களை கீழே போடுவதைப் போலவே, பூமியில் போட்டு பொருட்களை உடைக்கவும் செய்வார்கள். [scitamil]

அறிவியல் கோட்பாடு scientific theory | Scitamil.blogspot.in


நவீன அறிவியலில், அறிவியல் கோட்பாடு (scientific theory) என்பது சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, விவரிக்கப்பட்டு, பல பரிசோதனைகளையும், கருத்துக்களையும் [scitamil] ஒரே கட்டமைப்பில் பொருந்தி வைத்த கருதுகோளைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. யாராவது இந்த அறிவியல் கோட்பாட்டில் முழுவதுமோ அல்லது பகுதியோ தவறாக கண்டால், அந்த தேற்றம் மாற்றப்படுகிறது, அல்லது முழுவதும் தூக்கி எறியப்படுகிறது.பல
மாற்றங்களை கண்டது என்று ஒரு அறிவியல் கோட்பாட்டை காட்டவேண்டுமெனில், ஒரு எடுத்துக்காட்டாக நோய்க் கிருமி கோட்பாட்டினை குறிக்கலாம். பண்டைய காலங்களில், நோய்கள் கடவுளர்கள் காரணமாக, அல்லது சாபங்கள் , அல்லது முறையற்ற நடவடிக்கை மூலம் வருகின்றன என்று மக்கள் நம்பினர். கிருமிகள் பார்க்க மிகவும் சிறியதாக இருப்பதால், கிருமிகள், அறியப்படாததாக இருந்தன. நுண்ணோக்கி கண்டுபிடித்த பின்னால், கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டன, அதனால், நோய் மூலமாக கிருமி வருகிறது என்ற கோட்பாடு முன்மொழியப்பட்டது. நோய் கிருமி கோட்பாட்டின் காரணமாக, பல நோய்கள் இப்போது குணப்படுத்த முடியும். இருப்பினும், சில நோய்கள் கிருமிகள் இல்லாமலேயே உருவாவதால், நோய் கிருமி கோட்பாடு திருத்தத்துக்கு உள்ளானது.. காய்ச்சல் மற்றும் ஸ்கர்வி நோய் கிருமிகளால் உருவாவதில்லை, உருவாவதில்லை. மோசமான ஊட்டச்சத்து மற்றும் வைரசுக்களாலோ ஏற்படும் என்று தெரிகிறது. விஞ்ஞானிகள் நோய் கிருமி [scitamil]
கோட்பாட்டினை மாற்றி, "சில நோய் கிருமிகள் ஏற்படுகின்றன." என்று கூறுவார்கள்.
ஒரு கோட்பாடு அறிவியல் கோட்பாடாக அறியப்பட வேண்டுமெனில், அது ஒரு பெரிய எண்ணிக்கையிலான சோதனைகளில், பல்வேறு இடங்களில், வெவ்வேறு விஞ்ஞானிகளால் உறுதிப்படுத்தப்பட வேண்டும், மற்றும் சோதனை செய்யும் ஒவ்வொரு முறையும் அது நிரூபிக்கப்பட வேண்டும். இது தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் பெரும்பாலும் கணிதம் மூலமாக. இது மற்ற அறிவியல் கோட்பாடுகள் அனைத்துடனும் பொருந்த வேண்டும். அறிவியல் பல கிளைகளை கொண்டிருக்கிறது. இயற்பியல், வேதியியல், உயிரியல் , நிலவியல் , மற்றும் வானியல் அறிவியல் முக்கிய கிளைகள் சில இருக்கின்றன. அறிவியலின் ஒரு கிளையில் இருக்கும் ஒரு அறிவியல் கோட்பாடு, அறிவியலின் மற்ற கிளைகள் அனைத்திலுமே உண்மையாக இருக்க வேண்டும். உதாரணமாக, அனைத்து பொருட்களும் அணுக்களாலேயே உருவாகின்றன என்ற விஷயத்தை இயற்பியல் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் வேதியியலில் இருக்கும் ரசாயன பொருட்கள், உயிரியல் காணப்படும் உயிர்வாழும் திசு, பாறைகள் நிலவியல் ஆய்வு, மற்றும் வானியல் ஆய்வு கிரகங்கள் உள்ளிட்ட அனைத்திலும் அணுக்களாலேயே செய்யப்பட்டது. அணு கோட்பாடு அறிவியலின் ஒவ்வொரு பகுதியிலும் செல்லும்.ஒரு அறிவியல் கோட்பாட்டில் ஒரு விதிவிலக்கு கண்டுபிடிப்பது ஒரு முக்கிய நிகழ்வாக உள்ளது, மற்றும் ஒரு விஞ்ஞானி அப்படிப்பட்ட ஒரு விதிவிலக்கை கண்டுபிடிப்பதன் மூலம் பிரபலமான முடியும். ஐசக் நியூட்டனின் இயக்கவியல் விதிகளுக்கு ஒரு விதிவிலக்கை ஐன்ஸ்டீன் கண்டுபிடித்தார், அதன் மூலம் அவர் பிரபலமானார். பல நூறு ஆண்டுகளாக ஏற்கப்பட்டு இருந்த நியூட்டனின் கோட்பாடு, மாற்றப்பட வேண்டியதாக இருந்தது, அது மாற்றப்பட்டும் விட்டது.



இங்கே நவீன அறிவியல் முக்கிய கோட்பாடுகள் சில ஒரு பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த கோட்பாடுகள் முறை ஆயிரக்கணக்கான சோதனை செய்யப்பட்டும் விதிவிலக்கு ஏதும் இல்லாமல் இருக்கின்றன. அணு கொள்கை: அனைத்து பொருட்களும் அணுக்களாலேயே உருவாகின்றன. பருப்பொருள் [scitamil]
ஆற்றல் காப்பு கோட்பாடு: இரசாயன மற்றும் பௌதீக வினைகளில், பருப்பொருள் மற்றும் ஆற்றல் உருவாக்கவோ அழிக்கப்படவோ முடியாது. ஆற்றல் மற்றொரு ஆற்றலாகவோ அல்லது பருப்பொருளாகவோ மாறலாம். பருப்பொருள் ஆற்றலாக மாறலாம். மொத்த பருப்பொருள் ஆற்றல் அளவு மாறாது. E = mc2.இன் படி வாழும் உயிரினங்கள் செல் கோட்பாடு: அனைத்து உயிரினங்களும் உயிரணுக்களினால் ஆக்கப்பட்டவை.
பரிணாம கோட்பாடு: பூமியில் அனைத்து வாழ்க்கை எளிய வடிவங்களில் இருந்து பரிணமித்தது. நிலவியல் டெக்டோனிக் கோட்பாடு: பூமியின் மேற்பரப்பு மெதுவாக நகர்கிறது. இது டெக்டோனிக் அடுக்குகளால் உருவாக்கப்படுகிறது. வானியல் பால்மண்டல கோட்பாடு: விண்மீன்மண்டலங்களிலும் கிரகங்கள், நட்சத்திரங்கள், நட்சத்திரங்கள் கொத்து. தனிமங்களின் வரிசை அட்டவணை: அணுக்கள் தங்களது அணு எண் மற்றும் அணு எடையால் வேறுபடுத்தி காட்டப்படுகின்றன. இவையே அவற்றின் பண்புகளை விளக்குகின்றன.
சார்பியல் கோட்பாடு: அறிவியல் கோட்பாடுகள் அவை எந்த சட்டகங்களில் நடைபெறுகின்றனவோ அவற்றை சார்ந்துள்ளன.
குவாண்டம் கோட்பாடு: ஆற்றலின் மிகச்சிறிய அளவு ஒரு "குவாண்டம் அலகு" அனைத்து ஆற்றல்களும் இந்த மிகச்சிறிய குவாண்டம் அலகின் பெருக்கல் தொகையாலேயே உருவாகும். [scitamil]

கூகிள் மற்றும் நாசா இணைந்து எதிர்கால செயற்கை நுண்ணறிவை உருவாக்க தொடங்குகிறது | scitamil



கூகிள் மற்றும் நாசா ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து துளிம கணினிகளைப் (quantum computers) பயன்படுத்தி எதிர்கால செயற்கை நுண்ணறிவை (artificial intelligence) உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. இதற்காக அவை ஒரு ஆய்வகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.[scitamil]

 கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் அமெஸ் ஆய்வு மையம் (Ames Research Centre) என்னும் இடத்தில் புதிதாக ஒரு துளிம எதிர்கால நுண்ணறிவு பயிற்சிக்கூடம் (Quantum Artificial Intelligence Lab) ஒன்றை அமைக்கவிருக்கிறார்கள். டி-அலை கட்டகங்களிலிருந்து (D-Wave Systems) தற்போது துளிம கணினியை முதல் நோக்கமாக கொண்டு அந்த ஆய்வகம் செயல்படும்.
[scitamil]

 ஆய்வாளர்கள் துளிம கணினிகள் எப்படி இயந்திர அறிதிறனை (machine learnings) முன்னேற்றுகிறது என கண்டறிவர் என கூகிள் நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
[scitamil]

உலகம் வெப்பமடைதல் உண்மையே! - 97 விழுக்காடு அறிஞர்கள் ஒப்புதல் | Scitamil.blogspot.in


பொதுவாக நம்மிடம் உலகம் வெப்பமடைகிறது என்னும் கருத்தில் ஆராய்ச்சியாளர்களிடம் முரண்பாடான கருத்துக்கள் இருப்பதாக எண்ணம் உண்டு. ஆனால் அவ்வாறு இல்லை உலகம் வெப்பமடைவதும், அது மனிதனின் செயல்பாடுகளினால் தான் எனவும் அண்மையில் விஞ்ஞானிகளிடம் நடந்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரிய வருகிறது.

 காலநிலை மாற்றங்களை பற்றி நடத்தப்பட்ட சுமார் 12000 ஆய்வு அறிக்கைகளை தேர்ந்தெடுத்து கருத்துக்களை அறிய அறிவியலாளர்கள் முயற்சி செய்தனர். அதில் 4000 ஆய்வுகள் உலகம் வெப்பமடைவதைப்பற்றியும், அதனால் புவியின் காலநிலைகள் மாற்றமடைவதைப் பற்றியும் நேரடியான கருத்துகளை தெரிவித்திருந்தது. இதில் 97.1 விழுக்காடு அறிஞர்கள் உலகம் வெப்பமடைவது உண்மையே என கூறியுள்ளனர். மேலும் இந்த ஆய்வுகளை மேற்கொண்ட 8500 அறிஞர்களை தொடர்பு கொண்ட போது அதில் 1200 அறிஞர்கள் பதிலளித்தனர். இதில் 97.2 விழுக்காடு ஆய்வாளர்கள் உலகம் வெப்பமைகிறது என்றும், அதற்கு மனிதர்களின் செயல்பாடுகள் தான் காரணம் என்கின்றனர்.
[scitamil]

 இதில் மாற்று கருத்துக்கள் உடைய மிக குறைவானவர்களே. எனவே உலகம் வெப்பமடைதலும், அதனால் காலநிலைகளை மாறுபடுவதும் உண்மை என கூறலாம்.
[scitamil]

பூமி-கோள் மோதுகையாலேயே நிலவு தோன்றியது, ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது | Scitamil.blogspot.in






பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியுடன் கோள் ஒன்று மோதியதாலேயே நமது சந்திரன் தோன்றியதை வானியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். விண்வெளி வீரர்களினால் கொண்டுவரப்பட்ட சந்திரனின் பாறை ஒன்றிலேயே தீயா என்ற கோளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்கண்டுபிடிப்பின் மூலம் இப்படியான மோதுகையின் மூலம் சந்திரன் தோன்றியது என்று முன்னர் கூறப்பட்ட கோட்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாய்வுக் கட்டுரை சயன்சு என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கும் தீயா (Theia) என்ற கோளுக்கும் இடையே இடம்பெற்ற மோதல் பற்றிய கோட்பாடு 1980களில் கூறப்பட்டிருந்தது. இம்மோதுகையால் சிதறிய துண்டுகளில் ஒன்றே சந்திரனாக பூமியை வலம் வருவதாக நம்பப்படுகிறது. சந்திரனின் பாறையை நன்கு ஆராய்ந்ததில், அதில் இவ்வாறான வேற்று விண்வெளிப் பொருளின் எச்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [scitamil]

எம்.ஐ.டியின் ஆய்வு செவ்வாய் கிரகத்தில் மனிதர்களைக் குடியமர்த்துவது ஆபத்து என்கிறது | Scitamil




எம்.ஐ.டியில் (மசாசுசெட் தொழினுட்ப நிறுவனம்) நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் மார்ஸ் ஒன் என்ற செவ்வாய் கிரகத்தில் மனிதர்களைக் குடியமர்த்தும் திட்டம் ஆபத்தானதாக இருக்கும் என எச்சரிக்கிறது. மேலும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் சென்று வாழ முயன்றால், அவர்களால் வெறும் 68 நாட்களே தாக்குப்பிடிக்கமுடியும் என அவ்வாய்வு கூறுகிறது.[scitamil]


அண்டார்டிக்கா ஓசோன் ஓட்டை உறுதியாக உள்ளது : ஆய்வு The ozone hole | Scitamil.blogspot.in

ozone measure ballone | scitamil.blogspot.in

அண்டார்டிக்கா ஓசோன் ஓட்டை செப்டம்பர் மாதம் அதன் உச்சத்தைத் தொட்டது. கடந்த ஆண்டின் உச்சத்திற்கு நிகராக சுமார் 24.1 மில்லியன் சதுர கி.மீ ஆக நீண்டுள்ளது என ஒரு புதியு ஆய்வு வெளியிட்டுள்ளது. 

ஆகத்து முதல் ஒற்றோபர் மாதம் வரை ஒவ்வொரு ஆண்டும் இந்த ஓசோன் ஓட்டை உருவாகும். இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுமார் 24 மில்லியன் சதுர கி.மீ உச்சத்தைத் தொட்டது. [scitamil]

இதுவரையில் ஒரு நாளில் இந்த ஓசோன் ஓட்டை செப். 9, 2000 ஆண்டு 29.9 மில்லியன் சதுர கி.மீ என உயர்ந்ததே மிக அதிகமானதாக பதிவு செய்யப்பட்டதாகும். ஓசோன் ஓட்டையால் கதிரவனின் புற ஊதாக் கதிரலைத் தடுக்கமுடியாமல் போகும். புற ஊதாக் கதிரலைகளால் தோல் புற்றுநோய் ஏற்படும். பெருங்கடலின் முகனை உணவுச் சங்கிலியான அலைதாவரம் மற்றும் தாவரங்களும் பாதிக்கப்படும். 

ஓசோன் ஓட்டையை அளப்பதற்கு செறிவறி மிதவைக்கருவி ஊதுபைகளைப் (ozonesonde balloons) பயன்படுத்திவர். கோலோராடோவில் உள்ள புவி அமைப்பு ஆய்வுக்கூடத்தின் ‘த நேசனல் ஓசோனிக் அண்ட் அட்மாசுபியரிக் அட்மினிட்றேசன் (The National Oceanic and Atmospheric Administration (NOAA)) என்னும் அமைப்பு 1986ம் ஆண்டில் இருந்து தென் துருவத்தில் ஓராண்டுக்கு சுமார் 50-60 செறிவறி மிதவைக்கருவி ஊதுபைகளைக் கொண்டு ஓசோன் ஓட்டைகளை அளந்து வருகிறது. 

டாம்சான் (Dobson) என்னும் அலகில் இதனை அளக்கப்படுகிறது. [scitamil]

ஹிக்ஸ் போசோன்? 'கடவுள் துகள்' என்றால் என்ன? | what is higgs boson? what is god particle?

higgs boson -scitamil.blogspot.in

[scitamil]

பிரபஞ்ச ரகசியம் என்று ஒரு சொல் உண்டு. பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது மிகப்பெரிய ரகசியமாகவே இருந்து வருகிறது. கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று ஆன்மிகம் சொல்கிறது. ஆனால் விஞ்ஞானம் அதைக் கொஞ்சம் மாற்றிச்சொல்கிறது; அணுக்களால் ஆனது உலகம் என்று.
13750 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிக்-பேங்க் எனப்படும் பெரு வெடிப்பின்போது வாயுக்கள் உருவாகி பின்னர் அதில் உள்ள அணுக்கள் ஒன்றிணைந்து பிரபஞ்சமும், அதில் உள்ள மற்ற பொருட்களும் உருவானதாக விஞ்ஞானம் கூறுகிறது.
எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் என்ற 3 உட்பொருட்களின் சேர்க்கைதான் அணு. இந்த அணுக்களின் சேர்க்கைதான் வெவ்வேறு திடப்பொருட்களாக ஆகி உள்ளன. நாம் வாழுகிற பூமி, நம்மைச் சுற்றிலும் இருக்கிற டி.வி, செல்போன், மேசை, நாற்காலி, பேனா, மோட்டார் வாகனங்கள், இப்படி எல்லாமே அணு சேர்க்கையில் உருவானவைதான். இவற்றைப் போலவே எல்லாம் ஒன்றிணைந்த இந்த பிரபஞ்சமும் அடிப்படையில் அணுக்களின் சேர்க்கைதான்.
அணுக்களை சேர்க்கும் ஒட்டுப்பொருள் எது என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்தது. அணுக்களை ஒன்றோடு ஒன்று ஒட்டவைக்கும் பொருள் என்ன என்பதை கண்டுபிடித்தால், பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதால், அதை கண்டுபிடிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.[scitamil]
அணுக்களை மிக வேகமாக ஒன்றுடன் ஒன்று மோதவிடுவதன் மூலம் பெரு வெடிப்பின்போது ஏற்பட்ட சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் அணுக்களின் ஒட்டுப்பொருள் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.



ஹிக்ஸ் போசோன் ஆய்வு கூடம் scitamil.blogspot.in



இதற்காக பிரான்சு-சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே 574 அடி ஆழத்தில் 27 கிலோ மீட்டர் நீளம் உள்ள சுரங்கப்பாதை போன்று செர்ன் என்ற பெயரில் (அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய மையம்) ஒரு ஆராய்ச்சிக்கூடம் அமைத்து, உலக பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகள் ஒன்றுசேர்ந்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர்.[scitamil]
இதில் அணுக்களின் ஒட்டுப்பொருள் 12 துகள்களின் சேர்க்கை என தெரியவந்தது. அதில் 11 துகள்கள் கண்டறியப்பட்டன. 12-ஆவது துகள் ஒன்று உண்டு என்று விஞ்ஞானி ஹிக்ஸ், 1964-ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். அது அவரது பெயரையும் இணைத்து ஹிக்ஸ் பாசன் துகள் என்று அழைக்கப்பட்டு வந்தாலும், அது ‘கடவுள் துகள்’ என்று கூறப்படுகிறது.
இந்த கடவுள் துகளை கண்டறியும் முயற்சியில் ஜோ இன்கண்டேலா என்ற பிரசித்தி பெற்ற அணு விஞ்ஞானி தலைமையில், இரண்டு விஞ்ஞானிகள் குழுக்கள் இரவு பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த ஆராய்ச்சியின் முடிவில் இப்போது ஹிக்ஸ் பாசன் துகள் கண்டறியப்பட்டு விட்டது. அதாவது கடவுள் துகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.[scitamil]
இது தொடர்பான அறிவிப்பை ஜெனீவாவில் திரளான விஞ்ஞானிகள் முன்னிலையில் விஞ்ஞானி ஜோ இன்கண்டேலா நேற்று வெளியிட்டார். அதே நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஹிக்ஸ் பாசன் துகள்தானா என்பதை உறுதி செய்வதற்கு இன்னும் அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் தேவைப்படுவதாக கூறினார்.
செர்ன் தலைமை இயக்குனர் ரோல்ப் ஹியூயர் இது பற்றி கூறுகையில்;
ஹிக்ஸ் போசோன் மாதிரி- scitamil.blogspot.in
ஒரு புதிய மைல் கல்லை நாங்கள் எட்டி இருக்கிறோம். ஹிக்ஸ் பாசன் துகளை கண்டறிந்து இருப்பது, புதிய விரிவான ஆய்வுகளுக்கு வழிநடத்தி இருக்கிறது. இது பிரபஞ்ச ரகசியம் பற்றிய திரைகளை அவிழ்க்க உதவும் என்றார்.

இப்போது கண்டறியப்பட்டுள்ள ஹிக்ஸ் பாசன் துகள் என்று ஒன்று இல்லாமல், அணுக்களின் சேர்க்கையாக பிரபஞ்சம் உருவாகி இருக்க முடியாது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.[scitamil]


இசுரோவின் 2ம் செவ்வாய் சுற்றுகலன் 2018ல் ஏவப்படும் In 2018, ISRO will send another satillite to the MARS

உலகே பாராட்டும் வகையில் 2014ல் இசுரோ[ISRO] மங்கல்யான்-ஐ செவ்வாய்க்கு அனுப்பி வெற்றி கண்டது. அந்த வெற்றியுடன் 2018ல் இசுரோ அமைப்பு செவ்வாய் கோளைச் சுற்றி ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இம்முறை செவ்வாய் சுற்றுகலன் திட்டம் ஒரு தரையிறங்கி மற்றும் உலவியுடன் (lander and rover) பயணிக்கவிருக்கிறது எனக் கூறப்படுகிறது. 


பிரபஞ்சம் எப்படி உருவானது? What is the origin of the universe ? | scitamil

what is the origin of the universe: scitamil,blogspot.in
பிரபஞ்சம் என்பது ஒரு அதி அடர்த்தியான பந்து போலத்தான் முதலில் உருவானதாகக் கருதப்படுகிறது. இந்த அடர்த்தியான 'பிரபஞ்ச முட்டை’ (Cosmic egg) தான் படுபயங்கரமான ஒரு வெடிப்பினால் அப்படியே விரிவடைந்து, இப்போது நாம் காணும் பிரபஞ்சமாக உருவாகியுள்ளது. இந்தக் கருத்தை முதலில் கூறியவர் பெல்ஜிய நாட்டு வானியல் வல்லுனர் ஜார்ஜ் லமாய்டர் (Georges Lemaitre) என்பவர் தான். இப்படி ஒரு சிறிய அதி அடர்த்தியான உடல் வெடித்து அதனால் பிரபஞ்சம் உருவான நிகழ்வை 'மகா வேட்டு’ அல்லது 'மகா வெடிப்பு’ (Big Bang) என்று அழைக்கின்றனர். இப்படி வெடித்ததனால் அந்த முட்டையின் பாகங்கள் எல்லாம் விண்வெளியில் வெகு தூரத்துக்கு சிதறடிக்கப்பட்டன. அப்படி சிதறின பாகங்கள் எல்லாமே விநாடிக்கு பல்லாயிரம் கிலோமீட்டர்கள் என்கிற வேகத்தில் இன்னும் பயணிக்கின்றன. இந்த சிதறின, விரைவாக நகரும் பருப்பொருட்கள் தான் பின்னர் காலக்சிகளாகவும், விண்மீன்களாகவும், கிரகங்களாகவும் உருவாகின.[scitamil] இப்போது கூட பிரபஞ்சத்தின் எல்லா உடல்களும் வேகமாக விரிவடைந்து கொண்டே தான் செல்கின்றன. இதனை 'விரிவடையும் பிரபஞ்சம்’ (Expanding Universe) என்று அழைக்கின்றனர். காலக்சிகள் என்பவை நம்மை விட்டு விலகிச் சென்று கொண்டே உள்ளன. வெகு தொலைவில் இருக்கும் டிம்மான காலக்சிகள் இன்னும் வேகமாக நம்மை விட்டு விலகிச் செல்கின்றன. அமெரிக்க வானியல் வல்லுனர் மில்டன் ஹ்யூமாசன் (Milton Humason) என்பவர் 1929ஆம் ஆண்டு நம்மை விட்டு விநாடிக்கு 3800 கிலோமீட்டர்கள் என்கிற வேகத்தில் விலகிச் செல்லும் ஒரு காலக்சியைக் கண்டு பிடித்தார்.


அவரே 1936ஆம் ஆண்டு விநாடிக்கு 40,000 கிலோ மீட்டர்கள் என்கிற வேகத்தில் விலகிச் செல்லும் இன்னொரு காலக்சியையும் கண்டார். எல்லா காலக்சிகளும் இப்படி ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்வது எதனால் என்கிற காரணம் வானியலாளர்களுக்கு பெரிய பிரச்னையாக இருந்தது. மேலும் காலக்சிகளின் தொலைவு அதிகமாகும் போது, அவை நம்மை விட்டு விலகிச் செல்லும் வேகமும் அதிகமாகிறது.1929ஆம் ஆண்டு எட்வின் ஹப்புள் (Edwin Hubble) என்கிற அமெரிக்க வானியல் வல்லுனர் (நம் பால்வெளிகாலக்சி அல்லாமல் இன்னும் நிறைய இலட்சக்கணக்கான காலக்சிகள் பிரபஞ்சத்தில் உள்ளன என்று முதலில் சொன்னவர்) தான் இந்த விரிவடையும் பிரபஞ்சம் என்கிற கருத்தை முதலில் விளக்கினார். அவரது கருத்துப்படி முழு பிரபஞ்சமுமே சீராக விரிவடைகிறது. இதனால் காலக்சிகள் கூட ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்கின்றன.[scitamil]

'மகா வெடிப்பு’ என்கிற நிகழ்வு தான் பிரபஞ்சத்தின் ஆரம்பம் என்று முன்பே கண்டோம். அப்படியானால் அந்த நிகழ்வு எப்போது நிகழ்ந்தது என்று கேள்வி எழலாம். காலக்சிகளுக்கிடையேயான சராசரி தொலைவு, அவை ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்லும் வேகம் இவை தெரிந்தால், அவை எல்லாமே எப்போது ஒரே முட்டைக்குள் அடர்த்தியான பொருளாக அடங்கி இருந்தன என்று பின்னோக்கி கணக்கிட முடியும். ஆனால் காலக்சிகளுக்கிடையேயான சராசரி தூத்தைக் கணக்கிடுவது, கடினமான காரியம். மேலும் அவை எவ்வளவு வேகத்தில் ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்கின்றன என்பதை அறிவதும் கடினம் தான். மேலும் இந்த விலகும் வேகம் கூட எல்லாச் சமயங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இதனால் மேற்கூறிய எல்லாவற்றுக்கும் சில அனுமானக் கணக்குகளை வைத்து ஹப்புள் என்பவர் கணக்கிட்டு பிரபஞ்சம் என்பது 2 பில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியிருக்கக் கூடும் என்று சொன்னார். ஆனால் புவியியல் வல்லுனர்கள் மற்றும உயிரியல் ஆராய்ச்சியாளர்களின் கணக்குப் படி நம் தாய் கிரகமான பூமியே 2 பில்லியன் வருடங்களுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டிருந்தது. எனவே பிரபஞ்சம் என்பது நிச்சயம் பூமியை விடவும் வயதானதாக இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது.
தற்போது நிலவும் கருத்துப்படி பிரபஞ்சம் உருவாகக் காரணமான 'மகா வேட்டு’ என்ற நிகழ்வு சுமார் 15 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்திருக்க வேண்டும் எனப்படுகிறது. நம் சூரியக் குடும்பம் என்பது வெறும் 5 பில்லியன் வருடங்களாகத்தான் பிரபஞ்சத்தில் உள்ளது. சூரியக் குடும்பம் பிறப்பதற்கு முன்பு 10 பில்லியன் வருடங்கள் பிரபஞ்சம் என்பது இருந்து வந்துள்ளது. 'மகா வேட்டு’ அல்லது 'மகா வெடிப்பு’ என்ற வார்த்தையை முதலில் உருவாக்கியவர் அமெரிக்க வானியல் வல்லுனர் ஜார்ஜ் கேமோ (George Gamov) என்பவர்தான். அவர் தான் பிரபஞ்சம் உருவாகக் காரணமான நிகழ்வை இப்பெயரிட்டு அழைத்தார். உண்மையில் இந்த பெரு வெடிப்பை நம்மால் காண முடியுமா என்ற கேள்வி எழலாம். ஒரு விண்மீன் நம்முடைய பூமியில் இருந்து 10 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த விண்மீன் இரவு நேரத்தில் கண்  சிமிட்டும் சிறு ஒளிக் கற்றையாக நம் கண்ணுக்குத் தெரிகிறது. உண்மையில் நாம் பார்க்கும் அந்த ஒளி 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த விண்மீனில் இருந்து கிளம்பியிருக்க வேண்டும். அப்போது தான் அதன் ஒளியை நாம் இப்போது காண முடிகிறது. நாம் வெகு தொலைவு பின்னோக்கிச் செல்லும் போது கூட, இந்த மகா வெடிப்பை காண முடிவதில்லை. தற்போது 'குவாசர்கள்’ என்கிற ஒரு பிரகாசமான பொருட்களை விண்ணில் வானவியல் வல்லுனர்கள் கண்டுள்ளனர். இவற்றிலிருந்து வரும் ஒளி 15 பில்லியன் வருடங்களுக்கு முன்பு கிளம்பி தற்போது தான் பூமியை வந்தடைந்திருக்கிறது. அதாவது அவை பிரபஞ்சம் தொடங்கின காலத்திற்கு சற்று பின்னால் இருந்திருக்கினறன. இப்படி குவாசர்களின் ஒளி நம்மை அடையும் போது, மகாவேட்டின் போது உண்டாகியிருக்கும் ஒளியை ஏன் நம்மால் உணர முடியவில்லை என்ற கேள்வி எழுந்தது.



1949 ஆம் ஆண்டு ஜார்ஜ் கேமோ இதற்கான விடையை அளித்தார். மகா வெடிப்பின் எதிரொளியாக அதிலிருந்து கிளம்பின ஆற்றல் 'மைக்ரோ அலைகளாக’ (Micro waves) இப்போது எல்லாத் திசைகளிலும் பரவியுள்ளது என்று அவர் சொன்னார். மேலும் இந்த மைக்ரோ அலைகளின் ஆற்றல் அளவையும் அவர் ஓரளவு அனுமானித்துச் சொல்ல முடிந்தது. இப்படி மகாவேட்டின் போது உண்டான ஆற்றல் மைக்ரோ அலைகள் ரூபத்தில் விண்வெளியின் எல்லாத் திசைகளிலும் சமமான அளவிலும் சமமான ஆற்றலுடன் விரவியுள்ளன. கேமோ அனுமானித்ததை அமெரிக்க வானியல் வல்லுனர்கள் ஆலன் பென்சையஸ் (Allan Penzias)  மற்றும ராபர்ட் வில்சன் (Robert Wilson) ஆகியோர் 1964ஆம் ஆண்டு நிரூபித்தனர்.[scitamil]
பிரபஞ்சம் என்பது முதன் முதலாக ஒரு அதி அடர்த்தியான முட்டையாக இருந்தது என்றும், இப்போது பிரபஞ்சத்தில் நாம் காணும் எல்லா காலக்சிகளும் விண்மீன்களும் குவாசர்களும் ஆற்றல்களும் அந்த சிறிய முட்டைக்குள் தான் அடங்கியிருந்தன என்றும் நாம் கண்டோம்.
இந்த முட்டை அதி வெப்பமாகவும் அதி அடர்த்தியாகவும் இருந்து வெடித்ததனால் தான் பிரபஞ்சம் என்று இன்றைக்கு நாம் காண்கின்ற எல்லாமே (மனிதன், புல், பூண்டு, சூரியன், நிலா, காலக்சி) உருவானது என்றும் நாம் பார்த்தோம். அப்படியானால், இந்த பிரபஞ்ச கரு முட்டை எப்படி உருவாகியிருக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம்.
பிரபஞ்சத்தை உருவாக்கியது இந்த கரு முட்டை. இந்தக் கரு முட்டையை உருவாக்கியவன் தான் கடவுள் என்று சிலர் சொல்லக் கூடும். ஆனால் தற்கால விஞ்ஞானம் என்பது கடவுள் என்ற வார்த்தையை விட்டு வெகு தூரம் விலகிச் சென்று விட்டது. மனித விஞ்ஞானம் எந்தக் கருத்தையும் இப்படி கடவுளிடம் விட்டு விட்டு சும்மா இருப்பதில்லை. அறிவின் மூலமாகவும் 'Reasoning’ எனப்படும் அறிவாராய்ச்சியின் மூலமாகவும் மனிதன் இயற்கையின் ஆச்சர்யங்களுக்கு விடை தேடுகிறான். பிரபஞ்ச கரு முட்டையை கடவுள் உருவாக்கினார் என்று சொல்லி சும்மா இருக்க விஞ்ஞானம் விரும்பவில்லை.
1980ஆம் ஆண்டு அமெரிக்க இயற்பியல் வல்லுனர் ஆலன் கூத் (Alan Guth) என்பவர் இந்தக் கேள்விக்கான விடையை 'குவாண்டம் இயற்பியல்’ (Quantum Mechanics) என்கிற ஒரு துறையின் மூலமாக காண முற்பட்டார். அவரது கருத்துப்படி மகா வெடிப்புக்கு முன்னிருந்த பிரபஞ்சம் வெறுமனே ஒரு வெற்று வெளிதான். அதாவது அதிக ஆற்றலைத் தன்னகத்தே கொண்டிருந்த ஒரு வெற்றிடமாகத் தான் இந்தப் பிரபஞ்சம் இருந்திருக்கிறது. இதை இவர் 'போலி வெற்றிடம்’ (False Vacuum) என்று அழைத்தார். அதாவது வெற்றிடம் போல இருந்தாலும் அதில் அபரிமிதமான ஆற்றல் உள்ளார்ந்து நிறைந்திருந்தது. அதனால் ஆரம்ப பிரபஞ்சத்தை வெறுமனே வெற்றிடம் என்று சொல்ல முடியவில்லை.
ஒரு சில குருட்டாம் போக்கான நிகழ்வு மாற்றங்களால் இந்த ஆரம்ப ஆற்றல் வலிமையாக இருந்த இடங்களில் எல்லாம் சில தோற்றக் கூறுகள் உருவாகியிருக்க வேண்டும். அதாவது கடலில் எப்படி அலைகள் நுரையை உருவாக்குகின்றனவோ, அதே போல எல்லையற்ற, ஆற்றல் வாய்ந்த போலி வெற்றிடத்தில் ஆங்காங்கே எல்லையற்ற, ஆற்றல் வாய்ந்த போலி வெற்றிடத்தில் ஆங்காங்கே சில தோற்றங்கள் உருவாகின. இவற்றில் சில தோற்றங்கள் உண்டாகின அதே வேகத்திலேயே மறைந்து, மீண்டும் போலி வெற்றிட ஆற்றலாக மாறி விட்டன. இவ்வாறு ஆதி ஆற்றலில் இருந்து உருவான ஒரே ஒரு தோற்ற நுரை மட்டும் எப்படியோ சில காரணங்களால் நாம் வாழும் பிரபஞ்சமாக விரிவடைந்து இருக்க வேண்டும்.
மேலே ஆலன் கூத் சொன்னவை எல்லாமே ஏதோ விஞ்ஞானக் கதைகளில் வரும் நிகழ்வுகள் போலத்தான் இருக்கிறது. விஞ்ஞானம் என்பது இன்னும் Ultimate  எனப்படுகின்ற இறுதியான விதிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. விஞ்ஞானம் என்பது நிறைய அனுமானங்களை முன்னே வைக்கிறது. பின் அவற்றை நிரூபிக்க முயற்சிக்கிறது. எதுவும் இதில் உறுதி இல்லை. ஆலன் கூத்தின் கருத்துக்கள் கூட இன்னும் விஞ்ஞானிகளிடையே ஒரு புதிராகவே உள்ளது. கூத்தின் தியரி சரி என்று வைத்துக் கொண்டாலும் கூட, பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பு இருந்து இந்த 'போலி வெற்றிடம்’ எங்கே இருந்து உருவாகியிருக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. இப்படி பின்னோக்கி சென்று பிரபஞ்சத்தின் தொடக்கம் பற்றிய அறிய முற்படுவதில் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளது. அந்த 'போலி வெற்றிடம்’ என்பது கடவுளின் படைப்பு என்று வைத்துக் கொண்டால், 'கடவுள் என்பவரை யார் படைத்தது என்று சிலர் கேள்வி எழுப்பினர். கடவுள் நிரந்தரமாக எப்போதும் இருப்பவர் என்ற பதில் விஞ்ஞானிகளிடையே அவ்வளவாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.[scitamil]

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) | scitamil


ஸ்டீஃபன் வில்லியம் ஹாக்கிங், கலீலியோ மறைந்து சரியாக 300 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்ஸ்ஃபோர்டில் 1942ல் அவதரித்தார்.

அவர் ஆக்ஸ்ஃபோர்டில் இயற்பியல் பட்டம் பயின்றார். இளவயதிலேயே அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்கெலரோசிஸ்[ALS] என்ற நரம்பியக்க நோயால் ஆட்கொள்ளப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. கேம்பிரிட்ஜில் நியூட்டன் வகித்த பதவியான லூக்காசியன் கணிதவியல் பேராசிரியர் பதவியினை வகிக்கிறார்.

நியூட்டன், ஐன்ஸ்டீன் வரிசையில் ஹாக்கிங் வைக்கப்பட்டு போற்றப்படுகிறார். ஹாக்கிங் உடைய மிகப்பிரபலமான நூல் "காலம்-ஓர் வரலாற்றுச் சுருக்கம்" (A brief history of Time)ஆகும். விற்பனை பட்டியல் வரிசையில் முன்னிலை வகித்த நூல்.

பெருவெடிப்புக் (Big Bang) கொள்கைக்கான கணிதப்பூர்வ நிரூபணத்தை அளித்ததன் மூலம் இயற்பியல் உலகில் புகழின் உச்சிக்கு வந்தார், ஸ்டீஃபன் ஹாக்கிங். இம்முழு பேரண்டமும் ஒரு சிறு புள்ளியிலிருந்து வெடித்து வெளிப்பட்டது என இக்கொள்கை கூறுகிறது. அப்புள்ளியானது முடிவற்ற சிறிய புள்ளியாகவும், முடிவற்ற அடர்த்தியுடனும், முடிவற்ற நிறையீர்ப்பு கொண்டதாகவும் இருந்தது. ரோஜர் பென்ரோஸ்(Roger Penrose) என்பவருடைய கணித நுணுக்கங்களை பயன்படுத்தி தன்னுடைய நிரூபணங்களை ஹாக்கிங் நிறுவினார். இந்நுணுக்கங்கள் அண்டப்பிறப்பினை பற்றி ஆராய்வதற்காக மேம்படுத்தப்பட்டவை அல்ல, மாறாக கருந்துளைகளை (Black holes) பற்றி ஆராய்வதற்காக வளர்த்தெடுக்கப்பட்டவை.

போதியஅளவு பெரிய விண்மீன்கள் தன்னுடைய இறுதி காலத்தின்போது வலுவிழந்து அதனுள் இருந்த அனைத்து விஷயங்களும் நசுக்கப்பட்டு முடிவற்ற சிறுபுள்ளியாக முடிவற்ற நிரையீர்ப்பு, அடர்த்தி கொண்ட ஒற்றையாக சுருக்கப்படுகின்றன என விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது. ஆனால் பேரண்டத்தின்பிறப்பு என்பது கருந்துளையின் மறுதலை என ஹாக்கிங் உரைத்தார்.

பொருட்கள் நசுக்கப்பட்டு ஒற்றைப்புள்ளியாக ஆவதற்கு மாறாக, இப்பேரண்டத்தில் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் அனைத்தும் ஓர் ஒற்றை புள்ளியிலிருந்து பிரவாகமெடுத்தவை தான். இப்பேரண்டத்தை (Universe) முழுவதுமாக உள்வாங்கிக்கொள்ள வேண்டுமானால் கருந்துளைகள் பற்றிய ரகசியம் முடிச்சவிழ்க்கப்பட வேண்டும் என்றார் ஹாக்கிங்.



கருந்துளைகள்:





              கருந்துளைகளோடு நட்பாடுவதற்காக ஹாக்கிங் மற்றும் சக இயற்பியலாளர்கள் அறிவுப்பூர்வ இலக்கு நோக்கிய பயணத்தை தொடங்கினார். 1970 களிலிருந்து 80 வரையான காலம் கருந்துளைகளைப் பற்றிய ஆய்வுகளின் பொற்காலமாக திகழ்ந்தது.[scitamil]

தெளிவற்றிருந்து மீண்டும் தெளியவந்திருந்த இந்த பிம்பத்தில் ஏதோவொன்று தவறிப்போயுள்ளதை ஹாக்கிங் உணர்ந்தார். பேரளவிலான அண்டப்பொருள் இயற்பியலை மட்டுமே கருந்துளை ஆய்வுகளில் பயன்படுத்தப்பட்டது. நிறையீர்ப்பின் இயற்பியல் நியூட்டனால் முதலில் வளர்க்கப்பட்டு ஐன்ஸ்டீனுடைய பொது மற்றும் சிறப்பு சார்பியல் மூலம் பின்னர் வார்த்தெடுக்கப்பட்டது.

கருந்துளைகளை பற்றி முழுவதும் அறிந்துகொள்ள சிறிய அளவிளான அண்டப்பொருள் இயற்பியலையும் பயன்படுத்தவேண்டும் என்றார் ஹாக்கிங். சிறிய அளவிலான அண்டப்பொருள் இயற்பியல் என்பது அணு, அணுக்குள் நிகழும் இயக்கங்களைப் பற்றி விளக்ககூடிய குவாண்டம் இயங்கியல் ஆகும்.

இதற்கு முன் யாரும் இவ்விரு இயற்பியல் களங்களை இணைத்துப் பார்த்ததில்லை. கருந்துளையின் அடர்நிறையீர்ப்புக்குள் குவாண்டம் இயங்கியலையும் ஐன்ஸ்டீனுடைய சார்பியலையும் ஒரே சமயத்தில் நிலைநிறுத்தக்கூடிய புதிய வழியைப் பற்றி ஹாக்கிங் சிந்தித்தார்.

ஹாக்கிங் கதிரியக்கம்:


                 சில மாதங்களுக்குப் பிறகு குறிப்பிடத்தகுந்த முடிவுடன் ஹாக்கிங் வந்தார். கருந்துளையிலிருந்து ஏதோ சில வெளிவருகின்றன என அவருடைய சமன்பாடுகள் காட்டின. இது நடக்கவியலாத ஒன்று என யூகிக்கப்பட்டது.

கருந்துளைகளைப் பற்றி அறிந்திருந்த அனைவரும் அனைத்து விஷயங்களும் கருந்துளைக்குள் விழுந்துவிடும், ஒளி கூட தப்புவதில்லை என்றே கருதினார்கள்.[scitamil]

ஆதலால் ஹாக்கிங் மேலும் பரிசோதித்தார், மேலும் அதிகமாக அவருடைய கருத்து சரி என அறிந்துகொண்டார். கருந்துளையிலிருந்து கதிரியக்கம் வெளிப்படுவதை கண்டார். கருந்துளைகள் ஆவியாகி மறைந்துபோவதற்கு இக்கதிரியக்கம் தான் காரணம் என ஹாக்கிங் மெய்ப்பித்தார். இது "ஹாக்கிங் கதிரியக்கம்" என அழைக்கப்படுகிறது.

கருந்துளைகளின் ஆவியாதல் குறித்த ஹாக்கிங் கொள்கை புரட்சிகரமானதாகவும், வினோதமானதாகவும் இருந்த போதிலும் பெருமளவில் எற்றுக்கொள்ளப்பட்டது. அடிப்படை முக்கியத்துவத்திலிருந்து இவை வெகுதொலைவில் இருப்பதை ஹாக்கிங் அறிந்திருந்தார். 1976ல் "The breakdown of predictability in garaviational collapase" என்ற ஆய்வுத்தாளை அவர் வெளியிட்டார். அவ்வாய்வுத் தாளில் "அங்கு கருந்துளை மட்டும் மறைந்துபோவதில்லை, அதனுள் உறிஞ்சப்பட்ட அனைத்து விஷயங்களும் மறைந்து போய்விடுகின்றன" என அவர் வாதிட்டார்.

சான் பிரான்ஸிஸ்கோ வில் நடைப்பெற்ற இயற்பியல் சந்திப்பு நிகழும் வரை ஹாக்கிங்கின் யூகங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. உலகின் முன்னனி இயற்பியலாளர்கள் முன்னிலையில் ஹாக்கிங் தன்னுடைய ஆய்வுகளை வெளியிட்டார். ஜெராட் ஹூஃப்ட் (Gerad t' Hooft)மற்றும் லியோனர்ட் சஸ்கின்ட் (Leonard Susskind) ஆகிய இருபெரும் இயற்பியலாளர்களும் அங்கிருந்தனர்.

ஹாக்கிங்கின் கருத்துக்கள் கருந்துளைகளுக்கு மட்டும் பொருந்தக்கூடியதல்ல, மாறாக இயற்பியலின் அனைத்து செயல்களுக்கும் பொருந்தக்கூடியது என இருவரும் உணர்ந்தனர். "ஹாக்கிங் கருத்து மெய்யாக இருக்குமானால் அது இயற்பியல் முழுவதையும் பாதிக்கும்; காரணத்திற்கும் காரியத்திற்கும் நேரடி தொடர்பற்று போகும்; இயற்பியல் வலுவிழந்து போகும்" என சஸ்கின்ட் கூறினார்.

சான்பிரான்ஸிஸ்கோ சந்திப்பிலிருந்து "தகவல் முரண்மெய்மை" யானது இயற்பியலின் மிகவும் அடிப்படையான மிகவும் கடினமான பிரச்சினையாக உருவெடுத்தது. விவாதங்கள் சூடுபிடித்தன, சஸ்கின்ட்ன் மற்றும் ஹாக்கிங்கின் கருத்தினை தவறென்போர் ஒர் அணியாகவும் ஹாக்கிங் மற்றும் அவரது சகாக்கள் மற்றோர் அணியாகவும் வாதிட தொடங்கினர்.

தொடர்ந்து 20 ஆண்டுகள் அனல் பறக்கும் விவாதத்திற்கு பிறகும் கூட இரு அணியினரும் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை.

ஜூவன் மால்டசீனா (Juan Maldacena), அர்ஜென்டினாவின் இளம் கணித மேதையுடைய ஆய்வுத்தாள் வெளியானது. கருந்துளையினுள் இருந்த விஷயங்களுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றிய மிகக்கண்டிப்பான கணிதப்பூர்வ விளக்கத்தை அளித்தது அவ்வாய்வுத்தாள். ஆம், மால்டசீனாவின் வெளியீடு கருந்துளையினுள் உள்ள விஷயங்களுக்கு ஒன்றும் நேர்வதில்லை என உரைத்தது. ஆனாலும் ஹாக்கிங் சமாதானமடையவில்லை.

கிறிஸ்டோப் கால்ஃபர்ட் என்ற இளம் ஆராய்ச்சி மாணவருடன் இணைந்து மால்டசீனாவின் நிரூபணங்களை உடைக்க ஹாக்கிங் முனைந்தார். 2 ஆண்டுகளாகியும் அதனை முறியடிக்க இயலவில்லை.

அச்சமயம் ஒர் பேரிடர் நேர்ந்தது. ஹாக்கிங் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஹாக்கிங் மரணமடைந்துவிடுவார் என அனைவரும் கவலையடைந்தனர். ஆனால் அதன் பின் 30 ஆண்டுகளாகியும் ஜீவித்துக்கொண்டுள்ளார்.

இன்றுவரை முழுவதும் நிரூபிக்கப்பட்ட நிருபணங்களை ஹாக்கிங்கினால் கொடுக்கமுடியவில்லை. அவர் சக்கரநாற்காலியில் அமர்ந்துக்கொண்டு, கண்களின் அசைவால் கண்ணியோடு உறவாடி தன்னுடைய கருத்தினை நிரூபிக்க முனைந்துக்கொண்டிருக்கிறார் அவர் வெற்றிபெற்றுவிட்டால், அது அவருடைய நாயகன் ஐன்ஸ்டீனுடைய சாதனையைவிட மிகப்பெரிய சாதனையாக திகழும்.   [scitamil]

ஒரு சூப்பர் நோவா கருங்குழியை உருவாக்கும் அனிமேஷன் காட்சி! (Animation of Supernova Producing a Black Hole) | scitamil


மீயொளிர் விண்மீன் வெடிப்பு (supernova) என்பது அளவில் பெரிய விண்மீன்கள் தம் எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் மாபெரும் அளவில் ஒளியாற்றலை வீசி பேரொளியுடன் வெடிப்பதை குறிக்கும். மீயொளிர் விண்மீன் வெடிப்புகள் ஒரு முழு நாள்மீன்பேரடை முழுவதையும் விஞ்சும் அளவுக்கு ஒளி வீசக்கூடியது. குறைந்த கால அளவிலே உணரக்கூடிய (சில வாரங்கள் அல்லது மாதங்கள்) இத்தகைய ஒளிர்வு ஆற்றல், சூரியன் தன் வாழ்நாள் முழுவதும் வெளியிடக்கூடிய மிகப்பெரும் ஆற்றலைவிட அதிகமானது. இத்தகைய வெடிப்பின் மூலம் சிதறும் விண்மீன் எச்சங்கள் ஒளியின் வேகத்தில் பத்தில் ஒரு மடங்கு வேகம் வரையிலும் கூட சிதறுகின்றன. மேலும் வெடிப்பின் அதிர்வலைகள் விண்மீன் மண்டலத்தின் முழுவதும் பரவ வல்லவை.
அளவில் பெரிய விண்மீன்கள் தம் பரிணாம வளர்ச்சியின் முடிவில் அவற்றில் உள்ள எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் தம் ஈர்ப்பு விசையில் மாற்றம் ஏற்படுவதனால் நியூட்ரான் விண்மீனாகவோ அல்லது கருங்குழியாகவோ மாறுகின்றன. இம்மாற்றத்தை அடையும் முன் அவற்றின் வெளிப்பகுதி ஈர்ப்பு நிலை ஆற்றலால் வெடித்து சிதறுகின்றது. (Credit: wikipedia.org) [scitamil]

டைட்டானிக் கப்பலை சிதைக்கும் பாக்டீரியா | scitamil


டொரன்டோ: 1912ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி, இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு நியூயார்க் நோக்கி சென்று கொண்டிருந்த டைட்டானிக் கப்பல், அட்லான்டிக் கடலில் பனிப்பாறையில் மோதி 2223 பயணிகளுடன் விபத்தில் சிக்கியது. இதில் 706 பயணிகள் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். மற்ற அனைவரும் இறந்தனர். பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்வை, 98 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அதன் சிதைந்து போன எஞ்சிய பாகங்களின் மூலம் நினைவு கூர்ந்து வருகிறார்கள். இவை அட்லான்டிக் கடல் பகுதியில் காட்சிப்பொருளாக வைக்கப் பட்டுள்ளன.

இந்நிலையில் டைடானிக் கப்பலின் பாகங்கள் வேகமாக அழிந்து வருவது தெரியவந்துள்ளது. அதில் இருந்து சேகரிக்கப்பட்ட நுண்ணுயிரியின் டிஎன்ஏ[dna]  பரிசோதிக்கப்பட்டது. அப்போது ஆரஞ்சு நிறத்தில் உள்ள புதிய வகை பாக்டீரியா இரும்பை வேகமாக அழித்து வருவது தெரிந்தது.

இதனால் மிகவிரைவில் டைட்டானிக்கின் சிதைந்த பாகங்கள் முற்றிலும் அழிந்து தடயமின்றி போய் விடும் என்று கவலை தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். டல்ஹொஸ் ஹாலிபாக்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் கனடாவில் உள்ள நோவா ஸ்காட்டியா பல்கலைக்கழகம், ஸ்பெயின் செவிலா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு இணைந்து ஹென்ரீடா மான், பவ்லீன் கோர் ஆகியோர் தலைமையில் ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

அதில் கப்பலின் துருவை பொடியாக்கி அழித்து வரும் பாக்டீரியா முற்றிலும் புதிய வகை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி விஞ்ஞானிகள் கூறியதாவது, ‘இரும்பு துருப்பிடித்து மண்ணுடன் கலப்பதுதான் இயற்கை நியதி. இது கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிர்களான பாக்டீரியாக்கள் மூலம் சாத்தியமாகிறது. இது மிகவும் மெதுவாகவே நடைபெறும். ஆனால் புதுவகை பாக்டீரியா, டைட்டானிக் கப்பல் பாகங்களை வேகமாக அழித்து வருகிறது.

அந்த புது பாக்டீரியா இரும்பை சிதைப்பதில் அதிக சக்தி வாய்ந்தது என்பது ஆய்வில் உறுதியாகி உள்ளது. இரும்பை அழிக்கும் பாக்டீரியாக்கள் ஏராளமாக உள்ளன. இருப்பினும் புதிய பாக்டீரியா அதிவேகமாக செயல்படுகிறது. அதிக பட்சமாக இன்னும் 15 முதல் 20 ஆண்டுகள் வரை மட்டுமே இதன் சிதைந்த பாகங்கள் இருக்கும் என்று கவலையோடு சொல்கிறார்கள். [scitamil]