அணு உலை - ஏன் எதற்கு எப்படி? - 1

அணு உலை பற்றிய வழக்கமான கேள்விகளுக்கு விடையாக இந்த தொடர் அமையும். 
File:Fission chain reaction.svg
1. அணுவுலைன்னா என்ன?2. அணுவுலையில் பயன்படுத்தபடும் மூலப் பொருட்கள் என்னென்ன??3. அது எப்படி செயல்படுகின்றது?? (பெரிய கேள்வின்னு நினைக்கிறேன். ஏற்கனவே ஜெயபாரதன் அவர்களின் விளக்கத்தைப் படிச்சிருந்தாலும், அது புரியல. அதனால நீங்க கதை சொல்ற மாதிரி எழுதுங்க)4. எப்படி ஹீட் எனர்ஜியை, மெக்கானிக்கல் எனர்ஜியா மாத்துறாங்க?? ( நிலக்கரியில் ஓடுன இரயில் இஞ்ஜின் மாதிரியா??)5. மிக எளிதா அணுவுலையில் ஏற்படும் விபத்துகள் / ஆபத்துகள் என்னென்ன???6. அணுவுலையின் செயல்பாடுகளை ஏன் உடனே நிறுத்த முடியாது??7. ஏன் அணுவுலையை குளிர்விக்கும் செயல்பாடுகள் மிக கடினம்??8. அணுவுலையில் வரும் கழிவுகள்னா என்ன?? அது எப்படி இருக்கும்??9. கதிர்வீச்சு எப்படி இருக்கும். அதை நாம் எப்படி உணர்வது??10. கழிவுகளை மக்க வைக்கவே முடியாதா?? அல்லது அணுகுண்டுகள் போன்றவற்றிற்கு பயன்படுத்த முடியாதா??11. கதிர்வீச்சு, அணுவுலையின் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி வெளியே வருமா??? காற்றில் கலக்குமா??? பயணிக்குமா???12. வெளியேவரும் கதிர்வீச்சை அணுவுலை நிலையம் கணக்கிடுமா, கட்டுப் படுத்துமா??13. அணுவுலையை குளிர்விக்கப் பயன்படுத்தும் நீரில் கதிர்வீச்ச்ய் இருக்குமா?? அதைக் கடலில் கலந்தால் நீரின் வழியாக கலலில் கதிர்வீச்சு கலக்குமா???14. அணுவுலை வெடித்தால், ஏற்படும் நிகழ்வுகளை வரிசைப் படுத்தி விளக்கவும்.15. அணுவுலை வெடித்தவுடன் நாம் செய்ய வேண்டியது என்னென்ன???
இவைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம். 

முதலில் அணு உலை என்றால் என்ன? 
அணு உலை என்பது அணு பிளவின் மூலமாகவோ அல்லது அணு சேர்ப்பின் மூலமாகவோ வெப்பத்தை ஏற்படுத்தி அந்த வெப்பத்தை கொண்டு மின்சாரம் தயாரிப்பது. இதிலே மின்சாரம் தயாரிக்கும் முறையானது அனல் மின்சாரம் அதாவது நிலக்கரி எரித்து மின்சாரம் தயாரிக்கும் முறை போன்றது தான். இங்கு நிலக்கரியை எரித்து கிடைக்கும் வெப்பத்திற்கு பதிலாக அணுப்பிளவின் மூலம் கிடைக்கும் மின்சாரம். 
இதுல இரண்டு விஷயம் சொல்லியிருக்கேன். அணுப்பிளவு, அணு சேர்க்கை. இரண்டின் மூலமும் வெப்பம் வெளிப்படும் இரண்டின் மூலமும் மின்சாரம் எடுக்கலாம். ஆனால் இப்போதைக்கு இருக்கும் அணு உலைகள் அனைத்தும் அணுப்பிளவு மூலம் செயல்படுவை தான். அணுச்சேர்க்கை மூலம் செயல்படும் அணு உலை இயற்கையில் தான் உண்டு. அது சூரியன் போன்ற நட்சத்திரங்கள் தான். அந்த தொழில்நுட்பம் இன்னமும் மனிதனால் கண்டறியப்படவில்லை. 
அணுப்பிளவு
அணுப்பிளவு என்பது பற்றி பார்ப்போம். ஒரு அணுவை நீயூட்ரான் மூலம் பிளப்பது தான் அணுப்பிளவு. இதிலே பிளக்கப்படும் அணு தன்னுடைய எடையை விட குறைவான இரண்டு அணுக்களையும் மீதம் இருக்கும் எடையை வெப்பமாகவும் தரும். 
யூரேனியம் 235+ நீயூட்ரான் = பிளக்கப்பட்ட அணு + 2.4 நீயூட்ரான் + 192.9 மெகா எலக்ட்ரான் வோல்ட்(MeV)புளுட்டோனியம் 239 + நீயூட்ரான் = பிளக்கப்பட்ட அணு + 2.9 நீயூட்ரான் + 198.5 மெகா எலக்ட்ரான் வோல்ட்(MeV)
இந்த எலெக்ட்ரான் வோல்ட் என்பது ஒரு அளவீடு. ஒரு டிரில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்டுகள் ஒரு பறக்கும் கொசுவின் சக்திக்கு சமமானது. (http://rajasankarstamil.blogspot.in/2011/10/45.html)
http://en.wikipedia.org/wiki/File:Fission_chain_reaction.svg


இந்த வேலையானது ஐன்ஸ்டைனின் சமன்பாடான E = mC2 என்பதன் மூலம் செயல்படுகிறது. 
இந்த அணுப்பிளவின் போது அதிகமாக வரும் நீயூட்ரான்கள் உடனே அடுத்த யூரேனியம் அணுவை தாக்கும். அது இன்னும் மூன்று நீயூட்ரான்களை வெளியிடும். இப்படி வெளியிடுவது கட்டுக்குள் இருந்தால் அது தொடர் வினை என அழைக்கபடுகிறது. அப்படி தொடர்வினையாக இருக்கும் போது வெளிவரும் வெப்பமும் ஒரே போல் இருக்கும். 

அணுச்சேர்க்கை
இது இரண்டு அணுக்களை ஒன்றாக சேர்ப்பதன் மூலம் வரும் வெப்பத்தை அடிப்படையாக கொண்டது. ஆனால் இதற்கு முதலில் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை வேண்டும் அப்போது தான் அணுச்சேர்க்கை நடைபெறும். அணுப்பிளவிற்கு அது தேவையில்லை. ஏன் இதற்கு ஓர் குறிப்பிட்ட வெப்பநிலை வேண்டும்? ஏனென்றால் இரண்டு அணுக்களும் ஒன்றை ஒன்று விலக்கும், காந்த துருவங்கள் போல. அதை மீறவே இந்த வெப்பநிலை தேவைப்படுகிறது. 
டிட்டூரியம் + டிரிட்டியம் = நீயூட்ரான் + ஹீலியம் + 18 மெகா எலெக்ட்ரான் வோல்ட்
இந்த டிட்டூரியம், டிரிட்டியம் என்பதெல்லாம் ஹைட்ரஜனின் ஐசோடோப்புகள்.