விசித்திரமான பாலைவனத்தில் கிடைத்த வித்தியாசமான எலும்புக்கூடு
ஆஸ்கார் முனோஸ் அவர்கள் 2003 ஆம் ஆண்டு, “லா நொரியா” என்றழைக்கப்படும் அடகாமா பாலைவனப் பகுதியில் ஒரு எலும்புக்கூடினைக் கண்டுபிடித்தார். 15 செ.மீ க்கும் குறைவாக இருக்கும் இந்த எலும்புக்கூடு கடினமான பற்களையும், பெரிய தலைப்பகுதியையும் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
10 ஆண்டுகளாக இந்த எலும்புக்கூடு வேற்றுகிரக வாசிகள் இருப்பதற்கு ஒரு உதாரணமாகவே கருதப்பட்டு வந்தது. இந்த எலும்புக்கூடு பற்றி பல கருத்துக்கள் வலம் வந்த வண்ணம் இருந்தன. இது ஒரு குரங்கு இனமாகவோ அல்லது வேற்று கிரக வாசியாகவோ இருக்கலாம் என கற்பனை செய்யப்பட்டன. ஆனால் இதுவும் மனித இனம் தான் என தற்போதைய ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது.
இது பற்றி டி.என்.ஏ. மற்றும் பிற ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட டாக்டர் ஸ்டீவன் க்ரீர் தலைமையிலான குழு “இந்த உயிரினம் கண்டிப்பாக மனித இனமாகத்தான் இருந்திருக்க வேண்டும்” என்று உறுதிபடக் கூறுகிறது. அத்துடன் இவரின் கருத்துக்களை ஸ்டான்ஃபோர்டில் உள்ள டாக்டர் நோலன் மற்றும் டாக்டர் லாக்மான் ஆகியோரும் ஒப்புக்கொள்கின்றனர்.
மனித இனம் அழிய எவ்வளவு காலமாகும்
நமது மனித இனம் முழுமையும் அழியும் நிலை வந்தால், நாம் இருந்த சுவடே இல்லாமல் அழிய எத்தனை காலமாகும்?
தொல்பொருள் அளவீடுகளின் படி பார்த்தால்: நாளைக்கே நாம் அழிவதாக இருந்தால், பல நூறு ஆண்டுகளாக நாம் வாழ்ந்து வந்த கட்டிடங்கள் சிதையத் தொடங்கும். இதில் கடின உழைப்பால் உருவான கிரேக்க கோவில்கள், எகிப்து பிரமிடுகள் போன்றவை எஞ்சியிருக்கலாம். ஏனெனில் அவை இன்றும் நம்முடன் இருக்கின்றன.
புவியியல் அளவீடுகளின் படி பார்த்தால்: ஐரோப்பா நாடுகள் நிலப்பகுதியாக இருந்ததை விட நீர்ப்பகுதியாக இருந்ததற்கு அதிகப்படியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதன்படி பார்த்தால் மறுபடியும் ஒரு நாள் அனைத்து நிலப்பரப்பும் கடலால் மூழ்கடிக்கப்படும். அந்தக் காலகட்டத்தில் நமது சுவடுகள் மற்ற பாறைகள் அல்லது மண் சிதைவுகளுக்கிடையே பதிக்கப்பட்டிருக்கும். இப்படித் தான் நாம் டைனோசரின் சுவடுகளைப் பாறை படிநிலைகளில் இருந்து எடுத்தோம்.
இதுவரை கண்டறியப்பட்டதில் ஒரு செல் பாக்டீரியாவின் படிமங்கள் தான் மிகவும் பழமையானது. கணிப்பின் படி அவை சுமார் 3.5 மில்லியன் ஆண்டுகள் வயதுடையவை. அதே அளவீடுகள் தான் நம் இனத்திற்கும். நம்மில் சிலர் படிமங்களாகலாம் அல்லது பாறை படிநிலைகளாகலாம்.
விண்வெளியில் உடனே இறக்க முடியாது
நாம் பெரும்பாலும் பார்க்கும் ஹாலிவுட் அறிவியல் திரைப்படங்களில் ஏதேனும் வித்தியாசமாக காட்டுவார்கள். அதில் மனிதன் விண்வெளியில் தொலைந்து போவதாக இருந்தால் அவரின் உடல் வெடித்துவிடும் அல்லது இறந்துவிடுவர் என்பது போல் சித்தரித்து இருப்பார்கள். ஆனால் இது உண்மையில்லை. நமக்கு ஒரு ஆச்சரியமூட்டும் கதையைத் தருவதற்காக அவ்வாறு உருவாக்குகின்றனர்.
உண்மையில் நாம் விண்வெளிக்குச் சென்றால் 15 முதல் 30 வினாடிகள் வரை உயிர்வாழமுடியும். அதாவது நாம் சுவாசிக்கும் வரை உயிரோடு இருப்போம். நாம் சுவாசிக்கும் போது நுரையீரல் மற்றும் இரத்தச்செல்கள் நம் உடலைப் பாதுக்காக்கும். ஆனால் அதன் பிறகு அங்கு சுவாசிப்பதற்கு காற்று இல்லாததால் சுயநினைவினை இழக்கத் தொடங்குவோம், பின்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிடுவோம்.
பூமியின் வரலாறு – பெருவெடிப்பு தொடக்கம் உயிர் தோற்றம் வரை | சுருக்கம்
பூமியின் வரலாறு.
நாம் வாழும் பூமி உருவானது ஸோலார் நெபுலா வெடிப்பிலிருந்து தான். இந்த ஸோலார் நெபுலா என்பது சூபஂபர் நொவா எனஂனும் முதல் பெரு வெடிப்பு பிருந்து வந்தது. சறஂறு விரிவாக பார்த்தால், சூபஂபர் நொவா தான் இந்த யூநிவர்ஸ் அல்லது பிரபஞ்சத்தின் தாய்.சுமார் 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த சூபஂபர் நொவா எனும் மிகப்பெரிய எரியும் கோளம் வெடித்து சிதறியது.அதிலிருந்து அண்டம் முழுவதும் எறியப்பட்ட சிதறல்கள் தான் நாம் இப்போது காணும் மில்லியன் கணக்கிலன் நட்சத்திரங்கள். அதில் ஒன்று தான் ஸோலார் நெபுலா எனும் தூசு மற்றும் ஹீலியம், ஹைட் ரஜனஂ நிரம்பிய நெருப்பு பந்து.
கடலுக்குள் நிகழும் ஒரு இயற்கையான நிகழ்வு ஹைட்ரோ தெர்மல் வெண்ட். அதாவது பூமியிலிருந்து வெப்பம் மற்றும் கணிமங்கல் கடல் நீரில் வெளியேறும். இந்த பகுதியில் கடல் நீர் வெப்பமாகவும், கணிம சத்துகள் மிகுதியாக இருக்கும். இது ஆழத்தில் நிகழ்வதால் சூரியனின் புறவுதா கதிர்கள் இந்த பகுதியை அடைந்து இருக்க முடியாது. எனவே கடலில், இப்பகுதியில் தான் உலகின் முதல் உயிரினம்- சயனோ பக்டீரியா தோன்றியது. இந்த சயனோ பக்டீரியா ஒரு ஒளிசேர்க்கை செய்யும் உயிரி. இது உயிர்வாழ CO2, நீர், சூரிய ஒளி பொதும். இவை அனைத்தும் கடலில் கிடைத்ததால் இந்த ஒளிசேர்க்கை செய்யும் சயனோபாக்தீரியா முதல் உயிரியாக இந்த உ
லகில் உருவானது…
இது பல்கி பெருக தொடகியது.அப்பொது நம் பூமிக்கு சுமார் 700 மில்லியன் ஆண்டுகள். இந்த ஒளிசேர்க்கை செய்யும் ஸயநொ பக்டீரியா பல மில்லியன் ஆண்டுகளாக மாற்றம் அடைந்து நீர் வாழ் தாவரமாக, மாறின. அங்கிருந்து நிலத்திற்கு பரவின. தவரங்களுக்கு ஆக்சிஜன் தேவை இல்லாததால் அவை, அப்போது பூமியில் இருந்த CO2, மாழை நீர், சூரிய ஒளி கொண்டு வளர தொடங்கின. இவ்வாறு பூமி முழுவதும் உண்டான தாவரங்கள் கார்பன்-டை-ஆக்ஸைட் ஐ கிரகித்து . ஆக்ஸிஜனை வெளியிட்டன. இதனால் கார்பந்-டை-ஆக்ஸைட் அளவு குறைய தொடங்கி அவை பிராண வாயுவாக மாறின. மேலும் ஒரு பகுதி CO2 படிமங்களாகவும், கடலிலும் கரைந்தன. இவ்வாறாக CO2 அளவு குறைந்து போனது. O2 அளவு அதிகரித்தது. இந்த O2 UV கதிர்கள் எனும் புறவுதா கதிர்கள் ஆல் தாக்கப்பட்டு O3 எனும் ஓஜோன் மண்டலம் உருவானது. இந்த ஓஜோன் மண்டலம் தான் பூமியை புறவுதா கதீர்கலிடம் இருந்து காப்பாற்றி பூமியில் மேலும் பல வகையான உயிர்கள் தோன்ற காரணம் ஆயின. இந்த மாற்றங்கள் நிகழ நாம் பூமிக்கு நானூறு கோடி ஆண்டுகள் தேவை பட்டன. இந்த நானூறு கோடி ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்களே வெறும் நெருப்பு கோளாமாக இருந்த பூமியை உயிர்கள் உருவாகி நாம் வாழும் இந்த உலகமாக மட்ரியது.இது தான் நாம் பூமியின் வரலாறு
வாவ்- ஏலியன்ஸ் பூமியை தொடர்பு கொண்டனவா?
வாவ்- ஏலியன்ஸ் பூமியை தொடர்பு கொண்டனவா?
வருடம் 1977, ஒரு கோடைகால இரவு, வழக்கம் போல தான் ஆய்வகதில் விண்வெளியை பற்றியும், வேற்றுலாக வாசிகளை பற்றியும் ஆராய்சி செய்துகொண்டு இருந்தார் ஜெர்ரி எஹ்மான்,(Jerry Ehman). அன்று இரவு வழக்காதிற்கு மாறாக அவரது கணினி ஏதோ ஒரு ரேடியோ சிக்னலை பதிவு செய்தது.அந்த சிக்னல்(தகவல்/ சாமிக்ஞை) ஒரு 72 நொடிகளுக்கு தொடர்ந்து கிடைத்தது.எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த நிகழ்ல்வு ஜெர்ரியை திகைப்படைய வைத்தது. உடனேயே அந்த சிக்னலை, செய்தியாக கணினியின் உதவியுடன் பரிமாற்றப்பட்டது. இதற்கு மட்டும் மூன்று நாட்கள் எடுதுக் கொண்டதாக தெரிகிறது.அவ்வாறு பரிமாற்றப்பட்ட வார்த்தை தான் “வாவ்”.
அதாவது நாம் பூமியில் வாழும் உயிரினகளால் அனுப்ப படாத, நம் சூரிய குடும்பத்திற்கு வெளியிலிருந்து பெறப்பட்ட ஒரே தகவல். இந்த தகவல் டௌ சகிட்டரீ (Tau Sagittarii), என்ற நட்சதிரனின் சுற்றுப்புரதத்திலிருந்து வததாக பின்னர் கண்டறியப் பட்டது.இந்த நட்சதிரம் பூமியிலிருந்து 120 ஒளி ஆண்டுகள் (1 light-year= 9.4605284 × 10^12 kilometers) தொலைவிலிருந்து வந்தது.ஆனால் அது தான் சூரிய குடும்பத்திற்கு வெளியிலிருந்து நாம் பெற்ற முதல் மற்றும் கடைசி தகவல்.
அந்த தகவல் அனுப்பப்பட்ட அலைவரிசை 1420MHz . இந்த ரேடியோ அலைவரிசை வீண்வலி ஆய்விற்கு உகந்ததாக உள்ளதால் இந்த அலைவரிசை மற்ற வானொலி, தொலைக்கச்சியின் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த அலைவரிசைக்கு ஹைட்ரஜன் லைன் என்று பெயர்.
1977ல் பெறப்பட்ட பிறகு இன்று வரை வேறு எந்த சிக்னலும் பெறப்படவில்லை.ஒரு வேலை வேறு எந்த சிக்னலும் அனுப்ப படாவிளய, அல்லது அந்த தகவ்ல் அனுப்பப்பட்டு நம்மால் பெற முடியாமல் போனதா என்று இன்றுவரை விடை இல்லை.
35 வருடங்களாக பூமியிலிருது பல சிக்னல்கள் அந்த சிக்னல் வந்த திசை நோக்கி அனுப்பப் பட்டு வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியால் ஒரு நாள் அந்த சிக்னலை பற்றிய ஆய்விற்கு சரியான விடை கிடைக்கும். அப்போது எளியன்கள் பற்றிய மர்மங்கள் விலகும்.அவர்கள் இருப்பது உன்மயானால், அது நம் பூமியின் வரலாற்றை வேறு ஒரு புதிய பாதை நோக்கி அழைத்து செல்லும். இந்த வாவ் பற்றியும், எளியன்கள் பற்றிய உங்கள் கருதுக்களை பகிருங்கள்.
ஆச்சர்யம் ஆனால் உண்மை – மூளை குறித்த தகவல்கள்
நமது உடலின் எடையில் 2% மட்டுமே மூளையின் எடை. ஆனால் அது நம் ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்ஸிசனில் 20 % கிரகிக்கிறது.
மனிதனின் 18 வயசு வரைக்கும் மூளை வளர்ச்சி தொடரும் அதுக்கப்புரம் ?ஒவ்வொரு நாளும் மூளை செல்கள் இழப்பு நிகழும்.
நம் உடலின் மூளை நரம்பு செல்லின் தூண்டுணர்வின் வேகம் மணிக்கு 170 மைல்கள் எனக் கணக்கிட்டு இருக்காங்க.
ஒரு 10 வாட் பல்பு எரிவதற்கு தேவைப் படும் மின்சாரம் மூளைக்கு தேவை ,ஆச்சர்யம் ஆனால் உண்மை.(அதுக்காக கரண்ட்பெட்டில கைய வைச்சுராதீங்க ! )
என்சைளோபீடியா பிரிட்டானிக்கா புத்தகங்களில் உள்ள தகவல்கள் அளவில் 5 மடங்கு நம் மூளை தகவல்களை சேமிச்சு வெச்சு இருக்கு, இந்த தகவல் உறுதியா தெரியல ஆனா விஞ்ஞானிக நம்பராங்க… (குத்து மதிப்பா இருக்கும் போல )
விஞ்ஞானிகளுக்கு ஆச்சர்யம் அளிப்பது , நாம விழித்து இருக்கு போது செயல் படுவதை விட துங்கும் போது ஆதீத ஆற்றலில் செயல்பாடு எப்படி என்பதுதான்.
கை கால இடுப்பு வலி இதெல்லாம் அந்த அந்த பகுதியில் ஏற்படும் வலிதான் இல்லையா ஆனால் தலைவலி என்று சொல்வது மூளையை சுற்றி இருக்கும் நரம்புகள், ரத்த நாளங்களில் திசுக்களில் ஏற்படும் வலிதானே தவிர மூளை வலியை உணர்வது இல்லை. இன்னும் தெளிவா சொல்லனும்னா மூளையை தொட்டால் அதை உணர முடியாது.
இதயத்தில் இருந்து மூளைக்கு செல்லும் ரத்தக் குழல் தமனிகளை (aorta) ஒன்று சேர்த்தால் ( diameter of a garden hose) அந்த விட்ட அளவு வீட்டு தோட்ட திற்கு பயன்படுத்தும் குழாய் அளவு இருக்கும்
பொதுவாச் சொல்றது மூளையை நாம 10% தான் பயன் படுத்துறோம்னிட்டு அப்ப 90% சும்மா இருக்குமா என்றால் இல்லை , எல்லா செல்லுமே வேலை செஞ்சுகிட்டு தான் இருக்கும்.
தூக்கம் மூளைக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் 11 நாட்கள் ஒருவன் தூங்காம இருந்தால் அவன் இறந்து விடுவான்.
நாம் குடிக்கும் நீர் டைனோசரின் சிறு நீர்! – அறிவியல் ஆச்சரியம்
இந்த பதிவை வாசித்த பின் நீங்கள் குடிக்கப்போகும் தண்ணீர் மீதான உங்கள் பார்வை வித்தியாசமாக இருக்கும்.
வருடாந்தம் சுமார் 121,000 cubic miles தண்ணீர் ஆவியாதல் + மழை காரணமாக பூமியில் சுழற்சி அடைகிறது.
நாம் வெளியேற்றும் அனைத்து கழிவுகளும் பூமியின் இடைத்தட்டுவரை சென்று பின்னர் சமுத்திரங்களில் கலக்கிறது.
நாம் வெளியேற்றும் அனைத்து கழிவுகளும் பூமியின் இடைத்தட்டுவரை சென்று பின்னர் சமுத்திரங்களில் கலக்கிறது.
பூமியில் டைனோசர் காலம் சுமார் 186 மில்லியன் ஆண்டுகள் நீடித்தது.
நாம் சுமார் 200 000 வருடங்களாகவே பூமியில் வாழ்கிறோம்.
இதன் அடிப்படையில் பார்த்தால், டைனோசரின் சிறுநீர் நிலமூடாக கடலை அடைந்து பின்னர் பின்னர் சுழற்சி முறையில் மழையாக பெய்து குடி நீராகியுள்ளது. அதன் அடிப்படையில் நாம் குடிக்கும் ஒவ்வொரு குவளை நீரிலும் டைனோசரின் சிறு நீர் உள்ளது.
செவ்வாய் கிரகத்தில் நீல மர்மம் குறிப்பது என்ன?
செவ்வாய் கிரகத்தில் நீல மர்மம் குறிப்பது என்ன?
ஐரோப்பிய விண் ஆராய்ச்சி மையத்தினால் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் நீல நிற பகுதி ஒன்று கண்டறியப்பட்டது. முதலில் நீர் நிலையா எனும் கோணத்தில் ஆய்வுகள் நடந்தபோதிலும், இப்போது அது செவ்வாயில் ஏற்படும் அதி வேக புயல், எரிமலை முகடுகளுக்கு அருகாமையில் ஏற்படுத்திய சுழற்சியின் தாக்கம் என கூறப்படுகிறது.
செவ்வாயில் மணிக்கு 100km வேகத்தில் புயல் வீசும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான ஆய்வு மேலும் நுணுக்கமாக நடந்துவருகிறது.
நில நடுக்கமும் பாதுகாப்பும் : இயற்கைப் பேரழிவுகளும் பாதுகாப்பும் 1
பேரழிவு:
உலக சுகாதார நிறுவனம் (WHO – World Health Organisation), பேரழிவை விளக்கியிருக்கின்றது. அதன்படி, பொருளாதாரம், வளவாய்ப்புகள், மக்களின் உயிர், மக்களின் ஆரோக்கியம், உடல் நலம்பேண உதவும் சேவைகள் ஆகியவற்றில் ஏற்படும் சேதங்கள் அல்லது அழிவுகள், நாமே சரிசெய்து கொள்ள முடியாதபடி, உடனடி உதவிக்கும் மீண்டும் பழைய நிலைமையை அடைவதற்கும் மற்றவர்களின் (அல்லது வெளிநாட்டவரின்) உதவி பெருமளவில் தேவைப்படும்படி அழிவு அதிகமாய் இருந்தால், அத்தகைய அழிவு பேரழிவாகும்.
அழிவுக்கு, இயற்கையே காரணமாக அமைந்தால், அது இயற்கைப் பேரழிவு ஆகும்.
பேரழிவுகளின் வகைகள்:
பொதுவாக, பேரழிவுகளைக் கீழ்கண்ட மூன்றாக வகைப்படுத்தலாம்.
1. இயற்கைப் பேரழிவுகள் (Natural Disasters)
2. மனிதரால் ஏற்படும் பேரழிவுகள் (Man – Made Disasters).
3. மற்ற காரணங்களால் ஏற்படும் பேரழிவுகள் (Other Disasters).
இவை மூன்றும், பெருமளவுச் சீரழிவுகள் மற்றும் சிறிதளவுச் சீரழிவுகள் என்றும் பிரிக்கப்படும். எப்படிப் பிரித்தாலும், அழிவு அழிவுதானே.
இத்தகைய அழிவுகளை, கீழே முறையாக வரிசைப்படுத்தியிருப்பதைக் காண்க.
2. மனிதரால் ஏற்படும் பேரழிவுகள் (Man – Made Disasters).
3. மற்ற காரணங்களால் ஏற்படும் பேரழிவுகள் (Other Disasters).
இவை மூன்றும், பெருமளவுச் சீரழிவுகள் மற்றும் சிறிதளவுச் சீரழிவுகள் என்றும் பிரிக்கப்படும். எப்படிப் பிரித்தாலும், அழிவு அழிவுதானே.
இத்தகைய அழிவுகளை, கீழே முறையாக வரிசைப்படுத்தியிருப்பதைக் காண்க.
1.இயற்கைப் பேரழிவுகள்:
1.1பெரியவை:
1.1.1 நிலநடுக்கம்(Earthquake)
1.1.2 வெள்ளம் (Flood)
1.1.3 வறட்சி (Drought)
1.1.4 புயல் (Cyclone)
1.1.1 நிலநடுக்கம்(Earthquake)
1.1.2 வெள்ளம் (Flood)
1.1.3 வறட்சி (Drought)
1.1.4 புயல் (Cyclone)
1.2. சிறியவை:
1.2.1 வெப்ப அலைகள் – கடும் வெப்பம் (Heat Wave)
1.2.2 குளிர் அலைகள் – கடுங்குளிர் (Cold Wave)
1.2.3 நிலச்சரிவு (Land Slide)
1.2.4 பனிச் சரிவு (Avalanche)
1.2.5 சுறாவளி (Tornadoes)
1.2.6 புயல்காற்றோடு கூடிய ஆலங்கட்டி மழை (Hailstorm)
1.2.1 வெப்ப அலைகள் – கடும் வெப்பம் (Heat Wave)
1.2.2 குளிர் அலைகள் – கடுங்குளிர் (Cold Wave)
1.2.3 நிலச்சரிவு (Land Slide)
1.2.4 பனிச் சரிவு (Avalanche)
1.2.5 சுறாவளி (Tornadoes)
1.2.6 புயல்காற்றோடு கூடிய ஆலங்கட்டி மழை (Hailstorm)
2.மக்களால் ஏற்படும் பேரழிவுகள்:
2.1 பெரியவை:
2.1.1 ஜாதிக்கலவரங்கள் (Communal riots).
2.1.2 இனக்கலவரங்கள்(Ethnic conflicts).
2.1.3 அகதிகளின் நிலைகளால் (Refugee situations).
2.1.1 ஜாதிக்கலவரங்கள் (Communal riots).
2.1.2 இனக்கலவரங்கள்(Ethnic conflicts).
2.1.3 அகதிகளின் நிலைகளால் (Refugee situations).
3.மற்ற பேரழிவுகள்:
3.1 பெரியவை:
3.1.1 கொள்ளை நோய் மற்றும் தொற்று நோய்களால் (Epidemics)
3.1.2 தொழிற்சாலைகளால் ; (Industrial disasters)
3.1.3 தீயினால்; (Fire)
3.1.4 புதிய கொள்கை முடிவுகளுக்கு எதிர்ப்பால்(Policy induced disasters)
3.1 பெரியவை:
3.1.1 கொள்ளை நோய் மற்றும் தொற்று நோய்களால் (Epidemics)
3.1.2 தொழிற்சாலைகளால் ; (Industrial disasters)
3.1.3 தீயினால்; (Fire)
3.1.4 புதிய கொள்கை முடிவுகளுக்கு எதிர்ப்பால்(Policy induced disasters)
3.2 சிறியவை:
3.2.1 போக்குவரத்துகளால்; (By Transport).
3.2.2 பண்டிகைக் கொண்டாட்டங்கள் மற்றும் யாத்திரைகளை மேற்கொள்வதால்(Festival & Pilgrimage related disasters).
3.2.3 உணவால் (நச்சாவதால்) (Food).
3.2.4 கள்ளச்சாராயம் மற்றும் அதில் விஷத்தால் (Alcohol, Liquor disasters).
3.2.1 போக்குவரத்துகளால்; (By Transport).
3.2.2 பண்டிகைக் கொண்டாட்டங்கள் மற்றும் யாத்திரைகளை மேற்கொள்வதால்(Festival & Pilgrimage related disasters).
3.2.3 உணவால் (நச்சாவதால்) (Food).
3.2.4 கள்ளச்சாராயம் மற்றும் அதில் விஷத்தால் (Alcohol, Liquor disasters).
நிலநடுக்கம்:
எவ்வளவு நேரம் நிலம் நடுங்கும்:
பொதுவாக, பெருமளவு நில நடுக்கங்கள், சில செக்கண்டுகள் ? நேரம் மட்டுமே நடைபெறும். மிகப் பெரிய நிலநடுக்கமென்றால், 7 நிமிடங்கள் வரை நடுக்கம் ஏற்படும்: நடுங்கச் செய்யும், இத்தகைய பெரிய நிலநடுக்கம் நடந்து முடிந்ததும், மழை விட்டாலும் தூரல் விடவில்லை என்பதுபோல, அதன் தாக்கமாக, சின்னஞ்சிறிய நடுக்கங்கள் தொடரும்.
இந்துப்பெருங்கடலில் அடியில், 26.12.2004 இல் ஏற்பட்ட மிக பயங்கர (9 ரிக்டர்) நில நடுக்கத்தைத் தொடர்ந்து, அதன் பிரதிபலிப்பாக, அந்தமான் தீவுகளில் ஒரு மாதத்திற்குள் ஏறத்தாழ 100 தடவைகள் நிலம் நடுங்கியது கவனிக்கத் தக்கது.
நில நடுக்கத்தின் தீவிரம்:
நில நடுக்கத்தில் தீவிரம், பூமித்தட்டுகளின் கீழிருந்து தாக்கும் அழுத்தத்தைப் பொருத்தது; பூமித் தட்டுக்கள் ஒன்றோடொன்று மோதும் மோதலைப் பொறுத்தது; தட்டுகளின் அடர்வையும் பொறுத்தது. நிலநடுக்கம், சிறியதா, பெரியதா, மென்மையானதா அல்லது தீவிரமானதா என்பதை, நில நடுக்கத்தின்போது ஏற்படும் அலைகளை அடிப்படையாகக் கொண்டு அறிகின்றனர். இதற்கான அறிவியல் நுட்பம், 1935 ஆம் ஆண்டு, சார்ல்ஸ் எஃப் ரிக்டர் (Charles F.Richter) மற்றும் பீனோ குட்டன்பெர்க் (Beno Gutenberg) ஆகிய விஞ்ஞானிகளால் அறியப்பட்டது.
நில அதிர்வில் அளவு திறன், ரிக்டர் என்ற விஞ்ஞானியின் நினைவாக ரிக்டர் என்னும் அளவில் (Richter Scale) மதிப்பிடப்படுகிறது.
அதன்படி,
நில நடுக்கத்தின் தன்மைகள், கீழ்க்கண்டவாறு அறியப்படுகின்றன.
அதன்படி,
நில நடுக்கத்தின் தன்மைகள், கீழ்க்கண்டவாறு அறியப்படுகின்றன.
1. 0-1.90 மிக மிக மென்மையானது நாளொன்றுக்கு 8,000 தடவைகள் (Extremely minor).
2.0-2.90 மிக மென்மையானது(Very minor) நாளொன்றுக்கு 1000 தடவைகள்.
3.0-3.9 மென்மையானது (minor) ஆண்டுக்கு 49,000 தடவைகள்.
4.0-4.9 எளிதானது (Light) ஆண்டுக்கு 6200 தடவைகள்.
5.0-5.9 நடுத்தரமானது(Moderate) ஆண்டுக்கு 800 தடவைகள்.
6.0-6.9 திடமானது(Strong) ஆண்டுக்கு 120 தடவைகள்.
7.0-7.9 பெரிதானது (Major) ஆண்டுக்கு 18தடவைகள்.
8.0ம் அதற்கு மேலும் மிகப்பெரியது (Great)ஆண்டுக்கு ஒரு தடவைகள்.
2.0-2.90 மிக மென்மையானது(Very minor) நாளொன்றுக்கு 1000 தடவைகள்.
3.0-3.9 மென்மையானது (minor) ஆண்டுக்கு 49,000 தடவைகள்.
4.0-4.9 எளிதானது (Light) ஆண்டுக்கு 6200 தடவைகள்.
5.0-5.9 நடுத்தரமானது(Moderate) ஆண்டுக்கு 800 தடவைகள்.
6.0-6.9 திடமானது(Strong) ஆண்டுக்கு 120 தடவைகள்.
7.0-7.9 பெரிதானது (Major) ஆண்டுக்கு 18தடவைகள்.
8.0ம் அதற்கு மேலும் மிகப்பெரியது (Great)ஆண்டுக்கு ஒரு தடவைகள்.
நில நடுக்கத்துக்கு உட்படாமல் தப்பிக்க:
நில நடுக்கம் ஏற்படக்கூடிய பகுதிகள் என, உலகின் பல பகுதிகள் குறிக்கப்பட்டுள்ளன.
வாழ்விடங்களாக, அத்தகைய பகுதிகளைத் தேர்வு செய்யாமல், அவற்றைத் தவிர்த்து, வேறு இடங்களில் வாழலாம், வேறு வழி இல்லையெனில், நில நடுக்கத்தைத் தாக்குப் பிடிக்கும் முறையில் வீடுகளை அமைத்துக்கொள்ளலாம். அதற்கேற்ப, வீடு அல்லது கட்டடம் கட்டும் இடம், கட்டுமானப் பொருள் மற்றும் அஸ்திவாரம் ஆகியவற்றில், சிறப்புக்கவனம் செலுத்த வேண்டும்.
வாழ்விடங்களாக, அத்தகைய பகுதிகளைத் தேர்வு செய்யாமல், அவற்றைத் தவிர்த்து, வேறு இடங்களில் வாழலாம், வேறு வழி இல்லையெனில், நில நடுக்கத்தைத் தாக்குப் பிடிக்கும் முறையில் வீடுகளை அமைத்துக்கொள்ளலாம். அதற்கேற்ப, வீடு அல்லது கட்டடம் கட்டும் இடம், கட்டுமானப் பொருள் மற்றும் அஸ்திவாரம் ஆகியவற்றில், சிறப்புக்கவனம் செலுத்த வேண்டும்.
நிலநடுக்கத்தை முன்னறிதல்:
இந்தியாவும் நில நடுக்கமும்:
இந்தியாவில், கீழ்க்காணும் மாநிலங்கள் நிலநடுக்கங்களால் பாதிக்கப்படும் மாநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
1. ஆந்திரப்பிரதேசம்
2. அருணாச்சல பிரதேசம்
3. அஸ்ஸாம்
4. பீஹார்
5. டெல்லி
6. கோவா
7. குஜராத்
8. ஹரியானா
9. ஹிமாச்சலப் பிரதேசம்
10. ஜம்மு – காஷ்மீர்
11. ஜார்கண்ட
12. கர்நாடகா
13. கேரளா
14. மத்திய பிரதேசம்
15.மகராஷ்ட்ரா
16. மணிப்பூர்
17. மேகாலயா
18. மிசோரம்
19. நாகாலந்து
20. ஒரிஸ்ஸா
21. பஞ்சாப்
22. ராஜஸ்தான்
23. சிக்கிம்
24. தமிழ்நாடு
25. உத்திர பிரதேசம்
26. உத்திராஞ்சல்
27. மேற்கு வங்கம்
இந்தியாவில், பெரும்பாலான பகுதிகள் (65 விழுக்காடு) நிலநடுக்கதால்
பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1. ஆந்திரப்பிரதேசம்
2. அருணாச்சல பிரதேசம்
3. அஸ்ஸாம்
4. பீஹார்
5. டெல்லி
6. கோவா
7. குஜராத்
8. ஹரியானா
9. ஹிமாச்சலப் பிரதேசம்
10. ஜம்மு – காஷ்மீர்
11. ஜார்கண்ட
12. கர்நாடகா
13. கேரளா
14. மத்திய பிரதேசம்
15.மகராஷ்ட்ரா
16. மணிப்பூர்
17. மேகாலயா
18. மிசோரம்
19. நாகாலந்து
20. ஒரிஸ்ஸா
21. பஞ்சாப்
22. ராஜஸ்தான்
23. சிக்கிம்
24. தமிழ்நாடு
25. உத்திர பிரதேசம்
26. உத்திராஞ்சல்
27. மேற்கு வங்கம்
இந்தியாவில், பெரும்பாலான பகுதிகள் (65 விழுக்காடு) நிலநடுக்கதால்
பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின்போது தப்பிக்க-பாதுகாப்பாய் இருக்க:
நிலநடுக்கத்தை உணர்ந்ததும், அதன் பாதிப்பினின்று தப்பிக்க, செய்திட வேண்டியவை என்னென்ன என்பவை மிகவும் முக்கியம். ஆவற்றைக் கீழ்க்காண்க.
நிலநடுக்கத்தை உணர்ந்ததும், அதன் பாதிப்பினின்று தப்பிக்க, செய்திட வேண்டியவை என்னென்ன என்பவை மிகவும் முக்கியம். ஆவற்றைக் கீழ்க்காண்க.
1) காலம் கடத்தாமல் உடனடியாக, வீடு அல்லது அலுவலகத்தைவிட்டு வெளியேறி, திறந்த வெளிப் பரப்பில் வந்து நின்றுவிட வேண்டும்.
2) அவசரமாக வெளியேற முடியாத சூழ்நிலையில் உள்ளோர் மட்டும், (குறிப்பாக முதியோர், தாய்மார், குழந்தைகள், கற்பவதிகள்), வீட்டின் ஒரு மூலையில், வீட்டிலுள்ளவை ஒன்றும் தம்மீது விழுந்து விடாதபடி, பாதுகாப்பாய் ஒதுங்கி நின்று கொள்ள வேண்டும்.
3) அத்தகையோர், இரும்புக் கட்டிலின்கீழ் படுத்துக்கொள்ளலாம்: அல்லது மறைந்து கொள்ளலாம்.திடமான பெரிய மேஜையிருந்தால், அதனடியிலும் பதுங்கிக் கொள்ளலாம்.
4) பெரிய அலுவலகங்களில் பணி செய்வோரும், இம்முறையில் பாதுகாப்பாய் இருந்து கொள்ள வேண்டும்.
5) வீட்டைவிட்டு அல்லது அலுவலகத்தைவிட்டு வெளியில் வந்தோர், இங்கும் அங்குமாக அலைந்து, அல்லது ஓடித் திரியக் கூடாது.
6) மிக முக்கியமாக, ஒருபோதும் பதட்டப்படக்கூடாது: பயப்படக்கூடாது மற்றவர்களையும் பயப்படுத்தக்கூடாது.இதுபோன்ற வேளைகளில வேண்டியதுஇ தைரியமும் தெளிவுமே!
7) நிலநடுக்கத்தின்போது, வாகனங்களை ஒட்டிச்சென்றால், முதலில் வாகனத்தை நிறுத்துங்கள். அதனை நிலைப்படுத்திவிட்டு, வெட்ட வெளியில் நில்லுங்கள்.
8) எக்காரணம் கொண்டும், மின்கம்பங்களின் அருகே செல்லாதீர்கள். மரங்களின் கீழும் நில்லாதீர்கள். அவை சாயலாம். நீங்கள் சாய்ந்து விடக் கூடாது.
9) நிலநடுக்கத்தின்போது, வீட்டையோ, அலுவலகத்தையோ, நட்சத்திர விடுதிகளையே விட்டு வெளியேறி வர, லிஃட்டுகளைப் பயன்படுத்தாதீர்கள். முண்டியடித்தக் கொண்டும் ஓடாதீர்கள். (கட்டிடங்களும் வீடுகளுடம், ஒரு அவசரம் என்றால் உடனே பாதுகாப்பாய் வெளிவருவதற்கான வசதிகளைப் பெற்றிருக்க வேண்டும். கும்பகோணம் பள்ளியைப் பேன்ற நிலை இருக்கக் கூடாது).
10) எக்காரணம் கொண்டும், பழைய அல்லது பலமற்ற கட்டிடங்களில் இருக்காதீர்கள். ஆவற்றில் அடைக்கலமும் தேடாதீர்.
11) வீட்டில் இருக்க நேர்ந்தால், அமைதியாய் இருங்கள். நிலநடுக்கம் பற்றிச் சொல்லும் அறிவுரைகளையும், எச்சரிக்கை களையும் கேட்டு, அவற்றின் படியே செயல்படுங்கள்.
12) கடற்கரையை நோக்கிச் செல்லாதீர்கள். அவ்வேளையில் நீங்கள் கடற்கரையில் இருந்தால், நிலநக்கத்தைத் தொடர்ந்து சுனாமி வரும் வாய்ப்பு உள்ளதால், கடலோரத்தை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடத்துக்கு வந்து விடுங்கள்.
13) தண்ணீர் மற்றும் சமையல் வாயு இணைப்புகளைத் துண்டித்து விடுங்கள். (மின்இணைப்பையும் கூடத்துண்டித்துவிடலாம்).
14) இரவு நேரமானால், பேட்டரி விளக்குகளைப் (Torch Light) பயன்படுத்துங்கள்.
15) திறந்தவெளியிலுள்ள நீரைப் பயன்படுத்தாதிருங்கள்.
16) அவ்வப்போது, ஏதாவது சாப்பிட்டுக் கொள்ளுங்கள். அதனால் உங்களைக் காக்கவும் முடியும். மற்றவர்களைக் காப்பாற்றவும் முடியும்.
17) எக்காரணம் கொண்டும், இடிபாடான வீட்டுக்குள் அல்லது கட்டங்களுக்குள், உடனே நுழையாதீர்கள். ஏனெனில், தொடர் நடுக்கம் ஏற்படலாம்.
நிலநடுக்கத்திற்கு பின்:
நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னரும், தொடர் நடுக்கங்கள் உண்டாகும். அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். தொடர் நடுக்கங்கள் ஏற்பட்டால், எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்று, திட்டமிடுங்கள்.
நிலநடுக்கத்தால் காயமடைந்தோருக்கு முதலுதவியும், தேவைப்படுவோருக்கு உதவிகளும் செய்யுங்கள்
நிலநடுக்கத்தால் காயமடைந்தோருக்கு முதலுதவியும், தேவைப்படுவோருக்கு உதவிகளும் செய்யுங்கள்
அண்டத்தின் நிகழ்வுகள் THE UNIVERSE ACTIONS : உருவாக்கமும் எதிர்கால போக்கும்
முன்னுரை:
பிரபஞ்சத்தின் அழிவைப்பற்றி பல விஞ்ஞானிகள், பல மதங்கள் கூறுகின்றன. ஆனால் யாரும் அமைப்பற்றிய முழுமையான காரணத்தையும், நிருபணத்தையும் கூறவில்லை.
ஆனால் நான் அதைப்பற்றிய விஞ்ஞான நிருபணத்தையும், தீர்வுகளையும் “அண்டத்தின் நிகழ்வுகள்” என்னும் தலைப்பில் கூறி உள்ளேன்.
அண்டம் (UNIVERSE)
படைக்கப்பட்டுள்ள அத்தனை பொருட்களையும் உள்ளடக்கியது அண்டம் ஆகும்.
படைக்கப்பட்டுள்ள அத்தனை பொருட்களையும் உள்ளடக்கியது அண்டம் ஆகும்.
அண்டத்தின் நிகழ்வுகள்: (THE UNIVERSE ACTIONS)
மேலும் அந்த ஈர்ப்பு விசையினால் பலப்பொருட்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கவும் விலக்கவும் ஆரம்பித்தது. மேலும் இந்நிகழ்வில் பல பெரியப்பொருட்களை நோக்கி (அதாவது அதிக ஈர்ப்பு விசைக்கொண்ட பொருட்களை நோக்கி) பலசிறிய பொருட்கள் ஈர்க்கப்பட்டன.
இந்த நிகழ்வின் போது பல்வேறு சிறியபொருட்கள் பல்வேறு பெரியப்பொருட்களை தாக்கின. இதனால் அந்த அந்த பெரியப்பொருட்கள் நகர ஆரம்பித்தன.
மேலும் இந்த நிகழ்வின் போது ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட பல்வேறு சிறிய மற்றும் பெரியப்பொருட்களும் பிரபஞ்சவெளியில் நகர ஆரம்பித்தன.
இவ்வாறு பிரபஞ்சவெளியில் நகர ஆரம்பித்த பலப்பொருட்களில் படிப்படியாக சுழல்மின்னோட்டங்கள் தோன்றின.
மேலும் அப்பொருட்களின் வேகம் மற்றும் சுழல் மின்னோட்டங்களால் அப்பொருட்களின் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்துக்கொண்டே சென்றன. இதனால் அப்பொருட்கள் படிப்படியாக உருகியன.
இவ்வாறு அப்பொருட்கள் உருகிக்கொண்டே பிரபஞ்சவெளியில் தனது உருகிய மற்றும் உடைந்தப் பகுதிகளை சிதரடித்து கொண்டே நகர்ந்தன.
மேலும் இவ்வாறு சிதரடிக்கப்பட்ட பொருட்களில் சுழல்மின்னோட்டங்கள் பரவி காணப்பட்டன.
மேலும் சுழல்மின்னோட்டங்களினால் வெப்பமானப்பொருட்களில் இருந்து அனல், தூசு, புகை, வாயு மற்றும் அந்த பொருட்களின் பகுதிகள் போன்றவை வெளியேறியன.
இவ்வாறு வெளியேறிய பொருட்களை அதிக ஈர்ப்புவிசைக்கொண்ட பொருட்களும் மற்றும் அதனறிகில் உள்ள பொருட்களும் தன்னை நோக்கி ஈர்த்துக்கொண்டன. இதனால் அப்பொருட்களைச் சுற்றி வாயுமண்டலங்கள், துணைக்கோள்கள் மற்றும் பலப்பொருட்கள் ஏற்பட்டன.
மேலும் இவ்வாறு அதிக ஈர்ப்புவிசைக்கொண்ட பொருட்களாலும் மற்றும் அதனருகில் உள்ள பொருட்களாலும்; ஈர்க்கப்படாத பலபொருட்கள் பிரபஞ்சவெளியில் நகராமல் உள்ளன.
மேலும் இவ்வாறு மாற்றம் அடைந்த பொருட்கள் பிரபஞ்சவெளியில் திண்மமாகவும், நீர்மமாகவும், வாயுவாகவும், பிளாஸ்மாவாகவும் மற்றும் பல்வேறு பொருட்களாகவும் மாறியன.
இவ்வாறு மாற்றம் அடைந்த பொருட்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுக்கள் ஒருசில கோள்களில் (பொருட்களில்) ஏற்பட்டு அந்த பொருட்களில் உயிரினங்கள் தோன்றின.
மேலும் அண்டம் என்பது ஒரு பொருள் ஆகும். இந்த பொருள் தோற்றத்திற்கான காரணம் ஆற்றல் ஆகும். ஆற்றல் தோற்றத்திற்கான காரணம் பொருள் ஆகும். எனவே பொருளாற்றல் தோற்றத்திற்கான காரணம் அதாவது அண்டம் எப்படி செயல்படுகிறது எனில்,
‘தோன்றாப்பொருளின் தோற்றத்தின் தோற்றமாகவும் முடியாப் பொருளின் முடிவின் முடிவிலியாகவும்’
அதாவது,
‘தோன்றாப்பொருளின் உருவத்தின் உருவமாகவும் அழியாப்பொருளின் அழிவின் அழிவிலியாகவும்’
அண்டம் செயல்படுகிறது. எனவே அண்டமானது ”ஆற்றல் அழிவின்மை விதிப்படி’ தனது தோற்றத்தில் இருந்து ‘காலத்தை’ பொறுத்து தொடர்ந்து மாற்றம் அடைந்துக்கொண்டே இருக்கின்றன.
அண்டம் செயல்படுகிறது. எனவே அண்டமானது ”ஆற்றல் அழிவின்மை விதிப்படி’ தனது தோற்றத்தில் இருந்து ‘காலத்தை’ பொறுத்து தொடர்ந்து மாற்றம் அடைந்துக்கொண்டே இருக்கின்றன.
இந்த கொள்கையின்படி:
1. அண்டத்தில் உள்ள பொருட்களின் இயக்கத்திற்கு அடிப்படை காரணம் ஈர்ப்புவிசை.
2. அண்டத்தில் உள்ள பொருட்களின் இயக்கத்தின் காரணமாக பல அண்டப்பொருட்களில் சுழல்மின்னோட்டங்கள் தோன்றின.
3. இந்த சுழல்மின்னோட்டத்தின் காரணமாக அண்டத்தில் காணப்படும் பலப்பொருட்களில் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து அப்பொருட்கள்(NABULA)ஒண்மீன் படலமாக மாற்றம்அடைந்துக்கொண்டே இருக்கின்றன.
4. மேலும் புவி, மற்ற கோள்கள் மற்றும் அண்டத்தில் காணப்படும் பலப்பொருட்கள் (NABULA) ஒண்மீன் படலாமாக மாறும்.
5. இதனால் வருங்காலங்களில் உயிரினங்கள் வாழ புவி மற்றும் அண்டத்தில் காணப்படும் பலப்பொருட்கள் தகுதி அற்றதாக மாறி வெறும் வெப்ப விண்மீனாக காட்சித்தரும்.
6. மேலும் புவியில் ஏற்படும் இயற்கை சீற்றங்களுக்கு அடிப்படை காரணமாக அமைகிறது.
7. எனவே தற்போது மக்கள் வளங்களை அறிவியல் பாதையில் செலுத்தி வருங்காலங்களில் வேற்றுக்கிரகங்களுக்கு செல்வதற்கான ஆயத்தபணிகளை மேற்கொள்ளலாம்.
8. மேலும் தற்போதிய கண்டுபிடிப்பின்படி, வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இல்லை மற்றும் வேற்றுக்கிரகத்தில் புவியில் உள்ள உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்திய கூறும் அவ்வளவாக இல்லை. எனவே வேற்றுக்கிரகங்களில் உள்ள சூழ்நிலையை செயற்கை முறையில் புவியில் உள்ள ஆய்வகங்களில் உருவாக்கி அந்த சூழ்நிலையில் புவியில் உள்ள உயிரினங்களை தோற்றிவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
9. மேலும் இம்முறையில் அண்டத்தில் உள்ள பலப்பொருட்களில் (கோள்கள், துணைக்கோள்கள்…) போன்றவற்றில் புவியில் உள்ள உயிரினங்களை தோற்றிவிக்கலாம்.
10. மேலும் இந்த அண்டத்தின் நிகழ்வுகள் அணுக்களிலும், மூலக் கூறுகளிலும் காணப்படுகின்றன.
கறுப்புக்கண்:
வாயஜேர் -2 விண்கலம் நெப்டியூனைப் (Neptune) படம் பிடித்து அனுப்பியதை வைத்துப்பார்த்ததில் வியாழன் (Jupiter) கோளில் சிவப்புக்கண் இருப்பது போலவே நெப்டியூனில் கருப்புக்கண் ஒன்று இருக்கிறது என்னும் விவரத்தைத் தெரிந்து கொண்டார்கள். நெப்டியூனின் தென்பகுதியில் உள்ள இந்த ‘கறுப்பு புள்ளி’ அங்கு வீசும் அதிவேகக்காற்று காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
இந்த கறுப்புபுள்ளியின் உயரே வெண்ணிற மேகங்கள் இருப்பது போலவும் அந்தப்புகைப்படங்களில் காணப்பட்டது. ஏதோவொரு எரிசக்தி அந்தக்கோளில் இருப்பதையே அந்த வெண்ணிற மேகங்கள் காட்டுகின்றன என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தார்கள்.
மேலும் இந்த கறுப்புக்கண் போல் புவியில் (Annular) வளைய உருவம் என்ற பகுதி காணப்படுகிறது. இவ்வாறு காணப்படும் கறுப்புக்கண்கள் போன்ற தோற்றங்கள் (Annular) நெபுலாவின் நியூகிளியஸ் போல் உள்ளது.
எனவே புவி, நெப்டியூன், வியாழன் மற்றும் அண்டத்தில் காணப்படும் பல பொருட்கள் நெபுலா (nn) போல மாற வாய்ப்பு உள்ளது.
நெப்டியூன்:
நாம் வாழும் பூமிக்குச் சூரியனிடமிருந்தேதான் ஒளிகிட்டுகிறது என்பது தெரிந்ததே. ஆனால் சூரியனிடமிருந்து பூமிக்கு எவ்வளவு ஒளிகிட்டுகிறதோ அதில் 1000-தில் ஒரு பங்குதான் நெப்டியூன் கோளுக்குகிட்டுகிறது.
ஆனால் நெப்டியூனில் காணப்படும் வெப்பநிலை 300 ஆகும். இந்த அதிகமான வெப்பத்திற்கு காரணம் நெப்டியூனின் சுழற்சிவேகம் ஆகும்.
இந்த கொள்கையை விளக்க போதுமான சான்றுகள்:
1. அண்டத்தில் காணப்படும் அனைத்து பொருட்களிலும் மின்காந்தக்கதிர்வீச்சு காணப்படுகிறது.
2. அண்டத்தில் காணப்படும் பலப்பொருட்கள் காந்தத்தன்மை பெற்றுள்ளன.
2. அண்டத்தில் காணப்படும் பலப்பொருட்கள் காந்தத்தன்மை பெற்றுள்ளன.
சுழல்மின்னோட்டம்:
EDDY CURRENT (or) FOUCAULT CURRENT:
காந்தம் தன்னைத்தானே சுற்றிவரும்போது உலோகப்பெட்டி போன்ற உள்ளகத்தில் சுழல்மின்னோட்டம் ஏற்படுகிறது.
ஃபிளமிங் வலக்கை விதி:
(FLEMING’S RIGHT HAND RULE)
இந்த ஃபிளமிங் வலக்கை விதிப்படி, பிரபஞ்சத்தில் உள்ள பலப்பொருட்கள் தங்கள் மைய அச்சை மையமாக்கொண்டு வட்டப்பாதையிலோ அல்லது நீள்வட்டப்பாதையிலோ சுற்றிவருகின்றன. மேலும் பெரியப்பொருட்களின் ஈர்ப்புவிசையால் அவற்றை நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகின்றன.
தூண்டல் உலை: (Induction Furnace)
ஒரு உலோகத்திடப்பொருளில் உண்டாகும் மிக அதிக அளவிலான சுழல்மின்னோட்டங்களால் எந்த ஒரு உலோகமும் உருகிவிடும் அளவுக்கு அதிக வெப்பம் உண்டாகும்.
‘சுழல்மின்னோட்ட விளைவை முழுமையாக நீக்க முடியாது’.
‘சுழல்மின்னோட்ட விளைவை முழுமையாக நீக்க முடியாது’.
பூமி:
உள்மையப்பகுதி:
உள்மையப்பகுதியில் என்ன நடக்கிறது என்பது இன்னமும் முழுமையாக ஆராய்பபடவில்லை. எனினும் பூமியின் மேற்புறத்தில் ஏற்படும் சில மாற்றங்களுக்கு உள்மையப் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளே காரணம் என்று விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகிறார்கள்.
மாண்டில் பகுதிக்கும் உள்மையப்பகுதிக்கும் இடையில் உள்ள பகுதியில் மின்காந்தச் சுழல்களும் மின்காந்தக் கொந்தளிப்புகளும் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
அதன் காரணமாகவே பூமிக்கு மேற்புறத்தில் கண்டங்கள் இடம் பெயருகின்றன என்றும், துருவங்கள் மாறுகின்றன என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
பூமிக்குள்ளும் மழை:
பூமிக்கு வெளியே மழை பெய்கிறது அல்லவா? அதேபோல் பூமிக்குள்ளும் மழை பெய்கிறது! இதை நம்புவது சிரமமாக இருக்கிறது அல்லவா? ஆனால் அது உண்மை.
பூமிக்குள்ளே உட்புற மையப்பகுதியில் உண்டாகும் அபரிதமிதமான வெப்பத்தால் மாண்டில் பகுதியிலுள்ள பாறைகள் உருகி உட்பு மையப்பகுதியை நோக்கிச் செல்கிறது. அது ‘இரும்பு மழை’ என்று நம்முடைய விஞ்ஞானிகளால் குறிப்பிடப்படுகிறது.
பூமிக்குக் காந்தசக்தி ஏற்படுவதற்கு இந்த இரும்பு மழையே காரணம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
பூமிக்குள்ளே உட்புற மையப்பகுதியில் உண்டாகும் அபரிதமிதமான வெப்பத்தால் மாண்டில் பகுதியிலுள்ள பாறைகள் உருகி உட்பு மையப்பகுதியை நோக்கிச் செல்கிறது. அது ‘இரும்பு மழை’ என்று நம்முடைய விஞ்ஞானிகளால் குறிப்பிடப்படுகிறது.
பூமிக்குக் காந்தசக்தி ஏற்படுவதற்கு இந்த இரும்பு மழையே காரணம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
நிலநடுக்கம்:
பூமிக்குள்ளே உள்மையப் பகுதி முழுவம் இரும்புக் குழம்பாக இருக்கிறது என்பது ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது 5500 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் இருக்கிறது. அப்பகுதியில் ஒரு வகையான அலைகள் வீசிக்கொண்டிருக்கின்றன. அவை பூகம்ப அலைக்கதிர்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.
புவி காந்தப்புலத்திற்கு (Earth Magnetic Field) என்ன காரணம்?
அது இன்னும் யாருக்கும் நிச்சயமாகத் தெரியவில்லை. வால்ட்டர் மாரிஸ் எல்சாசர் (Walter Maurice Elsasser) என்கினற விஞ்ஞானி கூறியிருக்கிற விளக்கத்திற்குப்பரவலாக ஆதரவு இக்கிறது. பூமியின் மையத்தில் இரும்பு உருகித்திரவ நிலையிலுள்ளது.
பூமி சுலும்போது இரும்புத்திரவத்தின் சுழல்கள் தோன்றி மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுகின்றன. இவற்றின் காரணமாக மேற்கிலிருந்து கிழக்காக வட்டமிடும் ஒரு மின்னோட்டம் தோன்றுகிறது. இந்த மின்னோட்டம் பூமியின் அச்சுக்கோட்டில் வடக்குத்தெற்காக ஒரு காந்தப்புலத்தை உண்டாக்குகிறது. இதனால் பூமியின் அச்சுப்பகுதி ஒரு காந்தமாகிவிடுகிறது. இந்தக்காந்தம் பூமியைச் சுற்றிப்பரவியுள்ள காந்தப்புலத்தை உண்டாக்குகிறது என்று அவர் சொல்லுகிறார்.
பூமியின் உட்பகுதியில், 100 கிலோ மீட்டர் ஆழம் வரை சென்றால், அங்கு வெப்பநிலை 1,200 கெல்வின் ஆகும். 1000 கிலோமீட்டர் ஆழத்தில், வெப்பநிலை 3,000 கெல்வினாக உயர்கிறது. புவியின் மையப் பகுதியின் வெப்பநிலை, 6,400 கெல்வின். சூரியனின் மேற்பரப்பு வெப்பம், 6,000 கெல்வின்தான், புவியின் மையப் பகுதியின் வெப்பம், அதைவிட 400 கெல்வின் அதிகம் என்பது குறிப்பிடத் தகுந்தது
நெதர்லாந்தில் பிரபஞ்சங்களை இணைக்கும் வோர்ம்ஹோல் !?*! சந்தேகம்.
ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் விட்ட அவர், மின்னல் போன்றில்லாது வித்தியாசமாக தோற்றமளித்த அதை டுவிட்டர் சமூகதளத்தில் பதிவேற்றினார்.
புகைப்படத்தின் உண்மை தன்மையை ஆராய்ந்த சில ஆய்வாளர்கள் மேலும் ஆராய்ந்த போது அது ஒரு “வோர்ம்ஹோல் (பரவெளி இணைப்பு – Worm hole) என உறுதியாக நம்புகின்றனர்.
உது உண்மையாயின் அறிவியல் ஆய்வில் மிக மிக முக்கியமான ஒரு சம்பவமாக அமையும். முதலாவது அடையாளம் காணப்பட்ட worm hole ஆக இது அமையும்.
Worm hole என்பது blackhole எனப்படும் கருந்துளை தெற்றத்திற்கு ஒப்பானது, வெவ்வேறு பட்ட பிரபஞ்ச முனைகளுக்கு இதனூடாக செல்லாம் என்பது இது தொடர்பான எண்ணக்கரு.
வேற்றுக்கிரகவாசிகளை விரைவில் தொடர்புகொள்வோம், ஏரியா 51 கட்டுக்கதை. – NASA அதிகாரியின் தகவல்
நாசா விண் ஆராய்ச்சி மைய முக்கியமான நிர்வாகி ( Charles Bolden ) ஒருவர் மாணவருடனான கலந்துரையாடலின் போது சில முக்கியமான விடையங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
10 வயது மாணவன் “வேற்றுக்கிரக வாசிகள் இருப்பதை நீங்கள் நம்புகிறீர்களா ?” என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், வேற்றுக்கிரக வாசிகளை மிக விரைவில் தொடர்புகொள்வோம் என உறுதிப்படுத்தினார். சூரிய குடும்பத்தில் இல்லாவிடினும் அண்மையில் உள்ள கலக்ஷிகளில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் அதிகம் என கூறினார். 2018 இல் பாவணைக்கு நிறுவப்படவுள்ள James Webb telescope இன் உதவியுடன் அடுத்த 20-30 ஆண்டுகளுக்குள் நிச்சயம் வேற்றுக்கிரக வாசிகளை அடையாளம் காணமுடியும் என்றார். ( இச்சாதனம் வேற்று கிரகங்களில் இருக்கும் வளி மண்டலத்தை உண்ணிப்பாக அவதானிக்க உதவும்.)
ஏரியா51 எனப்படும் அமெரிக்காவின் (மெக்ஷிகோ எல்லை) உயர் கட்டுப்பாட்டு மர்ம பகுதி பற்றி கேட்ட போது, அங்கு தான் எந்த வித வேற்றுகிரக வாசிகளின் தடையங்களையோ பறக்கும் தட்டுக்களையோ காணவில்லை எனவும் அது சோதனைக்கான களம் மட்டுமே எனவும் தெரிவித்தார்.
ஆனால், ஏரியா51 பகுதியில் பறக்கும் தட்டுக்களை பார்த்ததாக 1951 ஆம் ஆண்டில் இருந்து அங்கு வேலை பார்த்தவர்களால் தகவல் கசிகிறது.
அழிந்து வருகிறது பிரபஞ்சம்
எமது பிரபஞ்சம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதை உறுதி செய்துள்ள வானியல் ஆய்வாளர்கள், ஆனால், எதுவும் விரைவில் நடந்துவிடாது என்றும் உறுதி செய்திருக்கிறார்கள்.
அழிந்து வருகிறது பிரபஞ்சம் |
உலகின் மிகவும் சக்தி மிக்க தொலைநோக்கிகளை பயன்படுத்தி இரண்டு லட்சம் நட்சத்திரக் குழுமங்களை கண்காணித்த அவர்கள், கடந்த இரண்டு பில்லியன் ஆண்டுகளில் பிரபஞ்சம் வெளியிடும் சக்தி அரைவாசியாக குறைந்துள்ளது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
புதிய நட்சத்திரங்கள் பிறக்கும் வேகமும் குறைந்து வருவதாக கூறும் பழைய ஆய்வுகளையும் அவர்கள் உறுதி செய்துள்ளனர்.
14 பில்லியன் ஆண்டுகள் பழமையான எமது பிரபஞ்சத்தின் விதி முடிய காலம் இருக்கிறது என்றும், ஆனால், அது நிரந்தரமற்றது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
சுந்தர் பிச்சை: கடந்து வந்த பாதை
கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாகப் பதவியேற்றிருக்கும் 43 வயது சுந்தர் பிச்சையின் வாழ்க்கை மிக சுவாரஸ்யமானது.
தந்தையின் கவனம்
அமெரிக்க நிறுவனங்களில் இந்தியர்கள்
கூகுளுக்கு வருமானத்தைப் பெற்றுத்தரும் கூகுள் தேடல், யூ ட்யூப் போன்ற தயாரிப்புகளில் சுந்தர் பிச்சையின் பங்களிப்பு இருந்தது. |
அமெரிக்க நிறுவனங்களில் இந்தியர்கள்
சென்னையில் பிறந்தவரான அவருக்கு படிப்பில் எந்த அளவுக்கு ஆர்வம் இருந்ததோ, அதே அளவுக்கு விளையாட்டிலும் ஆர்வம் இருந்தது. பள்ளிக்கூட கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கிய அவர் ,
பிராந்தியங்களுக்கிடையிலான போட்டிகள் பலவற்றில் வெற்றிபெற்றிருக்கிறார்.
பள்ளிக்காலத்திலிருந்தே தொலைபேசி எண்களை நினைவில் வைத்திருப்பதில் சுந்தர் பிச்சைக்குத் தனித் திறமை இருந்துவந்தது.
இரு அறைகளைக் கொண்ட வீட்டில் வசித்துவந்த சுந்தர் பிச்சையின் வீட்டில் சொந்தமாக டிவி, கார் போன்றவை இருந்திருக்கவில்லை. ஆனால், சுந்தர் பிச்சையின் தந்தை, தன் மகன்களின் கல்வியில் கூடுதல் கவனத்தைச் செலுத்திவந்தார்.
ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பனியில் பணியாற்றிய சுந்தர் பிச்சையின் தந்தை ரகுநாத பிச்சை, வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு, அன்று தன் வேலையில் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து மகன்களிடம் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறுகிறார்.
பள்ளிப்படிப்பை முடித்த பிறகு காரக்பூரில் உள்ள ஐஐடியில் உலோகப் பொறியியல் படிப்பை முடித்தார் சுந்தர் பிச்சை.
அதற்குப் பிறகு, உதவித் தொகையுடன் அமெரிக்க ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு சுந்தர் பிச்சைக்குக் கிடைத்தது.
அக்காலப்பகுதியில் அமெரிக்கா செல்வதற்கான விமான டிக்கட்டின் கட்டணம் சுந்தர் பிச்சையின் தந்தையின் ஒரு வருட சம்பளத்திற்கும் அதிகமானதாக இருந்தது.
2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் இணைந்த அவரது மேற்பார்வையின் கீழ், கூகுளின் இணைய உலவியான க்ரோம், மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட் ஆகியவை உருவாக்கப்பட்டன.
கூகுள் நிறுவனத்திற்கு வருமானத்தைப் பெற்றுத்தரும் கூகுள் தேடல், விளம்பரம், கூகுள் மேப் மற்றும் யூ டியூப் உள்ளிட்ட தயாரிப்புகளில் சுந்தர் பிச்சையின் பங்களிப்பு இருந்துவந்தது.
இதற்கும் முன்னதாக, அந்நிறுவனத்தின் உயர்பதவியில் இருந்த லாரி பேஜ், செர்ஜி ப்ரின் போன்றவர்கள் நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொறுப்புகளை சுந்தர் பிச்சையிடம் அளித்துவந்தாலும், இப்போது, அதிகாரபூர்வமாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக அவர் பதவியேற்றுள்ளார்.
அமெரிக்க தொழில்நுட்பத்துறையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் உயர்பதவியில் உள்ள சத்யா நாதெல்லாவுக்குப் பிறகு, மற்றொரு இந்தியரான சுந்தர் பிச்சை இந்த உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்.
பூமியை போன்று ஒரு புதிய பழமையான பெரிய கிரகம் கண்டுபிடிப்பு!
கெப்ளர் விண் தொலைநோக்கி மூலம் பூமியைப் போன்று புதிய கோளை கண்டறிந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இப்புதிய கோளுக்கு ‘கெப்ளர் 452பி’ என நாசா விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது 6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியுள்ளது மற்றும் சூரியனை விட 1.5 ஆண்டுகள் பழமையானது. மேலும், பூமியின் சுற்றளவை விட 60% பெரியது. பூமியிலிருந்து 1,400 ஒளி ஆண்டுகள் தொலைவில் சிக்னஸ்(Cygnus) நட்சத்திரக் கூட்டத்தில் இது அமைந்துள்ளது. இதுவரை இந்த தொலைநோக்கி மொத்தம் 1030 புதிய கிரகங்களை கண்டறிந்து உறுதிபடுத்தியுள்ளது. கெப்ளர் 452பி பூமியை விட 5% பெரியதாகும், அதனால் அது சுற்றுப்பாதையில் சுற்றிவர 385 நாட்கள் ஆகும். இக்கிரகத்தில் பூமியின் வெப்பநிலையே நிலவுகிறது, மேலும் பூமியை விட 20% வெளிச்சம் கொண்டது மற்றும் அதன் விட்டம் 10% பெரியதாகும். பூமியைப் போலவே இந்த கெப்ளர் 452பி இல் பாறைகள் மற்றும் தண்ணீர் உள்ளது.
Source:Nasa
Source:Nasa
விமானங்கள் நடு வானில் காணமல் போகும் ரகசியம் !
விமானங்கள் நடு வானில் காணமல் போகும் ரகசியம்!
உலகில் 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட பகுதியில் நடு கடல் பகுதியில் புவி ஈர்ப்பு விசை (கோஸ்ட் பிளேஸ் )அதிகமாக உள்ள இடங்கள் என கண்டறியபட்டுள்ளது.
அந்த இடங்களில் மட்டும் சுமார் 60அயிரம் அடிவரை இந்த புவி ஈர்ப்பு விசை இருக்கும் . இதன் மேல் எந்த பொருள் பூமிக்கு மேல் சென்றலும் அதை கீழே இழுத்து விடும் சக்தி கொண்டது. அத்தகைய இடங்களில் விமானமும் கப்பலும் செல்ல தடை உள்ளது.
முக்கியமாக இந்தோனேசியா கடல் பகுதியிலும், வங்காள விரிகுடா அந்தமான் பகுதியிலும், வடக்கு கனடா, பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் அதிக இடங்களில் இந்த கோஸ்ட் place என கூற படும் பகுதிகள் உள்ளது. இதுபற்றி அந்ந்தந்த விமான வழி தடங்களில் செயல்படும் விமானிகளுக்கு பயிற்சி கொடுக்கபட்டிருக்கும்.
வானில் 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டு இருக்கும் போது அந்த விமானம் வானவெளியில் பறக்க குறைந்த பட்ச காற்று அழுத்தம் தேவை. அப்போது தான் வானவெளி அந்தரத்தில் எஞ்சின் கட்டுப்பாட்டில் அதை சீராக கீழே இறங்காமல் நேரே விமானத்தை முன்னோக்கி கொண்டு செல்லும்.
சில சமயங்களில் மழை புயல் காலங்களில் விமானம் பறக்கும் தடத்தில் VACCUM pocket எனப்படும் நெகடிவ் பிளேஸ் வெற்றிடம் 200 முதல் 500 கிலோமீட்டர் வரை இருக்கும். அதை முன்பே விமானகட்டுபாட்டு அரை கண்டு கொண்டு விமானத்தை வெற்றிடம் இல்லாத தடத்தில் இயக்க விமானிகளுக்கு அறிவுரை வஷங்கபடும். சில சமயங்களில் கட்டுபாட்டு அரை ராடாரில் சிறிய அளவிலான வெற்றிடம் தெரியாது.
இது போன்ற சிறிய அளவிலான வெற்றிடங்களுக்கு அருகில் விமானம் வரும் போது தான் விமானத்தின் ராடார் சாதனத்தில் மட்டும் இது தென்படும். அப்போது நீங்கள் விமானத்தில் இருக்கும் போது விமானி நீங்கள் சீட் பெல்ட் அணிந்திராவிடில் உங்களை சீட் பெல்ட் அணிய சொல்லி அதற்க்கான உங்கள் தலைக்கு மேல் உள்ள எச்சரிக்கை சின்ன விளக்கை எரியவிடிவார். அடுத்த ஓரிரு நிமிடங்களில் விமானம் குண்டும் குழியும் இருக்கும் சாலையில் பயணிப்பது போல் ஒரு உணர்வு நமக்கு தெரியும்.
பொதுவாக விமானம் ஆகாயத்தில் பறக்கும் போது ஒரு எஞ்சின் மட்டும்தான் இயங்கும். மற்றொரு எஞ்சின் spare ராக எமெர்ஜென்சி க்கு பயன்படுத்த இருக்கும். வெற்றிடத்தில் விமானம் நுழையும் பொது இரு விமான எஞ்சின்களும் அதிகபட்ச RPM ல் மானுவலாக விமானி இயக்குவார். இது 20 முதல் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு வெற்றிடம் இருந்தால் மட்டும் விமானத்தை பாதுகாப்பாக செலுத்தி வெற்றிடத்தை தாண்டுவது சாத்தியம்.
ஒவ்வொரு விமானத்திலும் இரண்டு விமானிகள் இருப்பார். நீண்ட தூரம் செல்லும் விமானத்தில் 2 மணி நேரத்திற்கு ஒருவர் என விமானத்தை ஒரு விமானி கட்டுபாட்டில் வைத்து விமானத்தை இயக்குவார்கள். அப்போது ஒரு விமானி ஓய்வு எடுப்பார். சில சமயங்களில் விமானம் மேலே பறக்க துவங்கியவுடன் கட்டுபாட்டு அறையிலிருந்து அந்த விமான தடத்திர்கான நிலை குறித்து தகவல் வரும். வந்திருக்கும் weather ரிப்போர்ட் normal லாக இருந்தால் பல விமானங்களில் இரு விமானிகளும் AUTO BELT எனப்படும் தானியங்கி விமான இயக்க mode டை ஓட செய்து விட்டு கண்ணை மூடி தூங்கி விடுவார்கள்.
விமான தடத்தில் திடிரென சிறிய வெற்றிடம் வரும் போது திடிரென விமானம் கட்டுபாட்டை இழந்து சில நொடிகளில் கடலிலோ நிலத்திலோ விழும். இது போல் விபத்துக்கள் பெரும்பாலும் நள்ளிரவுக்கு பின் பறக்கும் விமானங்களில் நடக்கும்.
2008ம் ஆண்டு அதிகாலை நேரத்தில் 280 பயணிகளுடன் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்த இந்தியன் airline விமானமும் வங்காள விரிகுடாவில் பறந்து கொண்டு இருக்கும் போது இதுபோல் ஒரு காற்று இல்லா வெற்றிடத்தில் சிக்கி திடிரென விமானம் இருபத்து ஐந்தாயிரம் அடிக்கு கீழே செங்குத்தாக கீழே இறங்க கடலை தொடும் தருவாயில் விமானியின் சமயோசித தனத்தால் திரும்பவும் விமானத்தை கட்டுபாட்டுக்கு கொண்டு வந்து விபத்தை தவிர்த்தார் என்பது குறிப்பிடதக்கது.
உலகில் 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட பகுதியில் நடு கடல் பகுதியில் புவி ஈர்ப்பு விசை (கோஸ்ட் பிளேஸ் )அதிகமாக உள்ள இடங்கள் என கண்டறியபட்டுள்ளது.
அந்த இடங்களில் மட்டும் சுமார் 60அயிரம் அடிவரை இந்த புவி ஈர்ப்பு விசை இருக்கும் . இதன் மேல் எந்த பொருள் பூமிக்கு மேல் சென்றலும் அதை கீழே இழுத்து விடும் சக்தி கொண்டது. அத்தகைய இடங்களில் விமானமும் கப்பலும் செல்ல தடை உள்ளது.
முக்கியமாக இந்தோனேசியா கடல் பகுதியிலும், வங்காள விரிகுடா அந்தமான் பகுதியிலும், வடக்கு கனடா, பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் அதிக இடங்களில் இந்த கோஸ்ட் place என கூற படும் பகுதிகள் உள்ளது. இதுபற்றி அந்ந்தந்த விமான வழி தடங்களில் செயல்படும் விமானிகளுக்கு பயிற்சி கொடுக்கபட்டிருக்கும்.
வானில் 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டு இருக்கும் போது அந்த விமானம் வானவெளியில் பறக்க குறைந்த பட்ச காற்று அழுத்தம் தேவை. அப்போது தான் வானவெளி அந்தரத்தில் எஞ்சின் கட்டுப்பாட்டில் அதை சீராக கீழே இறங்காமல் நேரே விமானத்தை முன்னோக்கி கொண்டு செல்லும்.
சில சமயங்களில் மழை புயல் காலங்களில் விமானம் பறக்கும் தடத்தில் VACCUM pocket எனப்படும் நெகடிவ் பிளேஸ் வெற்றிடம் 200 முதல் 500 கிலோமீட்டர் வரை இருக்கும். அதை முன்பே விமானகட்டுபாட்டு அரை கண்டு கொண்டு விமானத்தை வெற்றிடம் இல்லாத தடத்தில் இயக்க விமானிகளுக்கு அறிவுரை வஷங்கபடும். சில சமயங்களில் கட்டுபாட்டு அரை ராடாரில் சிறிய அளவிலான வெற்றிடம் தெரியாது.
இது போன்ற சிறிய அளவிலான வெற்றிடங்களுக்கு அருகில் விமானம் வரும் போது தான் விமானத்தின் ராடார் சாதனத்தில் மட்டும் இது தென்படும். அப்போது நீங்கள் விமானத்தில் இருக்கும் போது விமானி நீங்கள் சீட் பெல்ட் அணிந்திராவிடில் உங்களை சீட் பெல்ட் அணிய சொல்லி அதற்க்கான உங்கள் தலைக்கு மேல் உள்ள எச்சரிக்கை சின்ன விளக்கை எரியவிடிவார். அடுத்த ஓரிரு நிமிடங்களில் விமானம் குண்டும் குழியும் இருக்கும் சாலையில் பயணிப்பது போல் ஒரு உணர்வு நமக்கு தெரியும்.
பொதுவாக விமானம் ஆகாயத்தில் பறக்கும் போது ஒரு எஞ்சின் மட்டும்தான் இயங்கும். மற்றொரு எஞ்சின் spare ராக எமெர்ஜென்சி க்கு பயன்படுத்த இருக்கும். வெற்றிடத்தில் விமானம் நுழையும் பொது இரு விமான எஞ்சின்களும் அதிகபட்ச RPM ல் மானுவலாக விமானி இயக்குவார். இது 20 முதல் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு வெற்றிடம் இருந்தால் மட்டும் விமானத்தை பாதுகாப்பாக செலுத்தி வெற்றிடத்தை தாண்டுவது சாத்தியம்.
ஒவ்வொரு விமானத்திலும் இரண்டு விமானிகள் இருப்பார். நீண்ட தூரம் செல்லும் விமானத்தில் 2 மணி நேரத்திற்கு ஒருவர் என விமானத்தை ஒரு விமானி கட்டுபாட்டில் வைத்து விமானத்தை இயக்குவார்கள். அப்போது ஒரு விமானி ஓய்வு எடுப்பார். சில சமயங்களில் விமானம் மேலே பறக்க துவங்கியவுடன் கட்டுபாட்டு அறையிலிருந்து அந்த விமான தடத்திர்கான நிலை குறித்து தகவல் வரும். வந்திருக்கும் weather ரிப்போர்ட் normal லாக இருந்தால் பல விமானங்களில் இரு விமானிகளும் AUTO BELT எனப்படும் தானியங்கி விமான இயக்க mode டை ஓட செய்து விட்டு கண்ணை மூடி தூங்கி விடுவார்கள்.
விமான தடத்தில் திடிரென சிறிய வெற்றிடம் வரும் போது திடிரென விமானம் கட்டுபாட்டை இழந்து சில நொடிகளில் கடலிலோ நிலத்திலோ விழும். இது போல் விபத்துக்கள் பெரும்பாலும் நள்ளிரவுக்கு பின் பறக்கும் விமானங்களில் நடக்கும்.
2008ம் ஆண்டு அதிகாலை நேரத்தில் 280 பயணிகளுடன் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்த இந்தியன் airline விமானமும் வங்காள விரிகுடாவில் பறந்து கொண்டு இருக்கும் போது இதுபோல் ஒரு காற்று இல்லா வெற்றிடத்தில் சிக்கி திடிரென விமானம் இருபத்து ஐந்தாயிரம் அடிக்கு கீழே செங்குத்தாக கீழே இறங்க கடலை தொடும் தருவாயில் விமானியின் சமயோசித தனத்தால் திரும்பவும் விமானத்தை கட்டுபாட்டுக்கு கொண்டு வந்து விபத்தை தவிர்த்தார் என்பது குறிப்பிடதக்கது.
Subscribe to:
Posts (Atom)