பெயர் : மைக்கல் ஃப்ரடே
பிறப்பு : 22/9/1791
பிரபலமான காரணம் : மின் மோட்டார் உருவாக்கம்; மின் காந்தவியல் மின் வேதியவியலில் ஆற்றிய அளப்பரிய சோதனைகள்.
வாழ்க்கை குறிப்பு : Michel Faraday மைக்கல் ஃபரடே (Michael
Faraday) 1791 ஆம் ஆண்டு (22/9/1791) இங்கிலாந்தில்
பிறந்தார். இரசாயனவியல் மற்றும் பெளதீகவியலில் முக்கியமான ஒரு நபராக இவர்
விளங்குவதற்கு காரணம், இவரின் பங்களிப்புடனேயே இன்று இன்றியமையாததாக
இருக்கும் மின்சாரம் ஒரு பாவனை பொருளாக மாறியது.
வறிய குடும்பத்தில் கொல்லருக்கு
மகனாக பிறந்த மைக்கல் ஃப்ரடே அக்காலத்தில் இங்கிலாந்தில் இருந்த சாதிவகுப்பு
காரணமாக பல சிக்கல்களை சந்தித்தார். தனது குடும்ப கஷ்டத்தை கருத்தில் கொண்டு
புத்தகங்கள் விக்கும் ஒருவரிடம் வேலைக்கு சேர்ந்துகொண்டார். அந்நேரம் அவருக்கு பல
புத்தகங்களை படித்தறியும் வாய்ப்புக்கிடைத்தது.
அதனூடாக அவரது கவனம் மின்னியலின்
பக்கம் திரும்பியது.
1812 இல் மின்னியலில் தனது தேடலை ஆரம்பித்த
இவர் முதலாவது மின்கலத்தை உருவாக்கினார். அடுத்த ஆண்டே 1813 இல் இங்கிலாந்தில் பிரபலமாக இருந்த ரோயல் சங்கத்தில் ( Royal
Institution ) சேர்.ஹொம்ஃப்ரி டேவி (Humphry
Davy) இடம் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
எனினும் அவரின் சாதிவகுப்பு காரணமாக பல சிக்கல்களை சந்தித்தார். ஆனால், பத்துவருடங்கள் கழித்து அதே ரோயல் சங்கத்தில் பேராசிரியராக
பணியாற்றும் வாய்ப்பை பெற்றுக்கொண்டார்! இந்த இடைப்பட்ட காலத்தில் (1821) இல் மின் காந்தவியல் சோதனையில் ஈடுபட்டு 10 வருடங்களில் மின்சார மோட்டாரை உருவக்கினார். 1821 இல் மின் காந்தவியல் பரிசோதனையில் ஈடுபட்டார். 10 ஆண்டுகளின் பின்னர் மின்சார மோட்டாரை உருவாக்கி சாதித்தார்.
பிரபல இனங்காண்பு
(கண்டுபிடிப்புக்கள்) : பாரடேவின் தூண்டல் விதி,
பாரடே விளைவு,
பாரடே கூண்டு,
பாரடே
மாறிலி,
பாரடே கோப்பை,
பாரடே முரண்பாடு,
பாரடே-திறன்,
விளைவு பாரடே அலை
விசைக்கோடுகள்...
No comments:
Post a Comment