இபோலா.. குறிப்புக்கள்:

இபோலா.. குறிப்புக்கள்:

9873706.jpg

இபோலா என்பது ஒரு வைரஸ் நோய்.

இது பழ வெளவால்கள் மூலம் பரப்பப்படுகின்றது.

இது மனிதரில் இருந்து மனிதரில்.. பிரதானமாக உடற்திரவ பரிமாற்றங்கள் மூலம் கடத்தப்படுகிறது.

இபோலாவால் பாதிக்கப்பட்ட.. இறந்த மனிதரை தொடுவதன் மூலமாகவும் தொற்றுக்கு வாய்ப்புள்ளது.

இபோலா தாக்கினால்.. அது உடலக அங்கங்களில் உள்ளக குருதி கசிவு மற்றும் மூளை முண்ணானை பாதிக்கச் செய்து மரணத்தை விளைவிக்கும்.

இது தொற்றியதில் இருந்து 2 தொடங்கி 21 நாட்களுக்குள் குணம்குறிகளை வெளிப்படுத்தும். காய்ச்சல்.. வாந்தி.. பசியின்மை.. தலையிடி.. மூட்டுக்களில் தசைகளில் நோவு.. பலவீனம்.. வயிற்றுப்போக்கு.. இரத்தக்கசிவு என்று பல அறிகுறிகள் ஒரு நேர இருக்கலாம்.

இதற்கு மருந்து என்று இன்னும் எதுவும் இல்லை. குரங்குகளில் பரீட்சைக்கப்பட்ட மருந்துகளை இப்போது தீவிர நோய் தொற்றாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

தொற்றின் ஆரம்பத்தில்.. இந்த நோய் கண்டறியப்பட்டால் அன்றி குணப்படுத்துவது கடினம்.

140404150128-01-ebola-in-west-africa-hor

தொற்றுள்ளவர்கள் மற்றும் மரணமானவர்கள் மூலமும் தொற்று நிகழலாம் என்பதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டே சிகிச்சை அளிக்கப்படுவார்கள் அல்லது இறந்த பின் எரிக்கப்படுவார்கள்.

இது நீண்ட காலமாக ஆபிரிக்க நாடுகளில் உள்ள போதும்.. தற்போதைய தொற்று கூடிய அளவு மரணங்களை விளைவித்து வருவதோடு.. குறிப்பாக மேற்கு ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருவோர் மூலம்.. உலகலாவிய அளவுக்கு இது பரவிடுமோ என்ற அச்சமும் வெளியிடப்பட்டுள்ளது.

8dbde-ebola.jpg

மைக்கல் ஃப்ரடே – வாழ்க்கை குறிப்பு | கண்டுபிடிப்பாளர்

பெயர் : மைக்கல் ஃப்ரடே 
பிறப்பு : 22/9/1791 
பிரபலமான காரணம் : மின் மோட்டார் உருவாக்கம்; மின் காந்தவியல் மின் வேதியவியலில் ஆற்றிய அளப்பரிய சோதனைகள். 

வாழ்க்கை குறிப்பு : Michel Faraday மைக்கல் ஃபரடே (Michael Faraday) 1791 ஆம் ஆண்டு (22/9/1791) இங்கிலாந்தில் பிறந்தார். இரசாயனவியல் மற்றும் பெளதீகவியலில் முக்கியமான ஒரு நபராக இவர் விளங்குவதற்கு காரணம், இவரின் பங்களிப்புடனேயே இன்று இன்றியமையாததாக இருக்கும் மின்சாரம் ஒரு பாவனை பொருளாக மாறியது. 

வறிய குடும்பத்தில் கொல்லருக்கு மகனாக பிறந்த மைக்கல் ஃப்ரடே அக்காலத்தில் இங்கிலாந்தில் இருந்த சாதிவகுப்பு காரணமாக பல சிக்கல்களை சந்தித்தார். தனது குடும்ப கஷ்டத்தை கருத்தில் கொண்டு புத்தகங்கள் விக்கும் ஒருவரிடம் வேலைக்கு சேர்ந்துகொண்டார். அந்நேரம் அவருக்கு பல புத்தகங்களை படித்தறியும் வாய்ப்புக்கிடைத்தது. 
அதனூடாக அவரது கவனம் மின்னியலின் பக்கம் திரும்பியது. 

1812 இல் மின்னியலில் தனது தேடலை ஆரம்பித்த இவர் முதலாவது மின்கலத்தை உருவாக்கினார். அடுத்த ஆண்டே 1813 இல் இங்கிலாந்தில் பிரபலமாக இருந்த ரோயல் சங்கத்தில் ( Royal Institution ) சேர்.ஹொம்ஃப்ரி டேவி (Humphry Davy) இடம் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டது. எனினும் அவரின் சாதிவகுப்பு காரணமாக பல சிக்கல்களை சந்தித்தார். ஆனால், பத்துவருடங்கள் கழித்து அதே ரோயல் சங்கத்தில் பேராசிரியராக பணியாற்றும் வாய்ப்பை பெற்றுக்கொண்டார்! இந்த இடைப்பட்ட காலத்தில் (1821) இல் மின் காந்தவியல் சோதனையில் ஈடுபட்டு 10 வருடங்களில் மின்சார மோட்டாரை உருவக்கினார். 1821 இல் மின் காந்தவியல் பரிசோதனையில் ஈடுபட்டார். 10 ஆண்டுகளின் பின்னர் மின்சார மோட்டாரை உருவாக்கி  சாதித்தார். 

பிரபல இனங்காண்பு (கண்டுபிடிப்புக்கள்) : பாரடேவின் தூண்டல் விதி,
பாரடே விளைவு,
பாரடே கூண்டு, 
பாரடே மாறிலி, 
பாரடே கோப்பை,
பாரடே முரண்பாடு,
பாரடே-திறன்,
விளைவு பாரடே அலை விசைக்கோடுகள்...