ட்விட்டரில் அதிக ஃபாலோவர்களை பெறுவது எப்படி?

ட்விட்டரில் அதிக பாலோவர் பெற இரண்டு வழிகள் உண்டு!
1. நேர்மையா
2. குறுக்கு வழி!

முதல்ல குறுக்குவழிய பாப்போம். இது கொஞ்சம் கஷ்டம் ஆனா எல்லாருமே இதபண்ண முடியும்.

அதிகம் பாலோவர்ஸ் இருக்க ஒருத்தரோட அக்கவுண்ட்க்கு போய் அவங்கள பாலோ பண்ற எல்லாரையும் பாலோ பண்ணணும். [தமிழ்-பெயர் வெச்சவங்கள மட்டும் மத்தவங்கள பாலோ பண்ணா பின்னாடி கஷ்டமாயிடும்]. இப்படி பண்றதால அவங்க நம்ம பாலோ பண்ணுவாங்க[FollowBack]. நம்ம பாலோ பண்ணவங்க தப்புதப்பா! ட்விட்ஸ் போட்டா Unfollow பண்ணீரனும்.

நம்மை பாலோ பண்றவங்கள நாமளும் பாலோ பண்ணனும். அத ஈசியா பண்ண [http://www.unfollowspy.com/] இந்த லிங்க் போயி Sign-in பண்ணி You Don't Follow Back-ங்கற பட்டனை தட்டினால் போதும்.

நம்மை பாலோ பண்றவங்க யாரெல்லாம் FollowBack பண்ணலனு தெரிஞ்சுக்க Not Follow Back-ங்கற பட்டனை தட்டினால் போதும். இந்த வெப்சைட் Free தான் ஆனா ஒருநாளைக்கு 100 பேரைதான் பாலோ பண்ண முடியும்.

ஆனால் கவனம் ஒருநாளைக்கு 500பேருக்கு மேல் பாலோபண்ணா ட்விட்டர்காரன் நம் அக்கவுண்ட்ட ப்ளாக் பண்ணீருவான்.

இத தினமும் செஞ்சுட்டே வரனும். நிறைய பாலோவர்ஸ் வர வர நல்ல ட்வீட்டுகளையும் போடணும். [Copy+Paste தப்பில்லை!]

இதன்மூலம் 10 நாள்-ல 1000+ பாலோவர்ஸ் பெறமுடியும்.

வழி 2. நேர்மையான வழி.

கொஞ்சம் பாலோவர்ஸ் இருந்தாலும் பரவால.. நல்ல ட்விட்ஸ் சுயமா காபி பேஸ்ட் பண்ணாம போட்டுட்டு இருந்தாலே போதும். பொறுமையா பாலோவர்ஸ் வந்தாலும் ட்விட்ஸ் தொடர்ந்து போட போட வந்துகிட்டே இருப்பாங்க. இடைவெளி இருக்க கூடாது.