இந்திய நியுட்ரினோ ஆய்வுக்கூடம் | scitamil.blogspot.com

நியுட்ரினோவைப் பற்றி

அணுவின் அங்கமாக எலக்ட்ரான் இருக்கையில், இயற்கையில் எலக்ட்ரானை போலவே ஆனால் அதனை விட கனமான இரண்டு துகள்கள் உண்டு. அவை: மியுவான் - இது எலக்ட்ரானை விட 200 மடங்கு கனமானது மற்றும் டவ்வான்- இது எலக்ட்ரானை விட 3500 மடங்கு கனமானது. இத்துகள்கள் ஏன் இங்கு உள்ளன ? யாரும் அறியர். இந்த மூன்று துகள்களுக்கு இணையாக மொத்தம் மூன்று வகையான நியுட்ரினோக்கள் உள்ளன. எலக்ட்ரானுக்கு இணையாக எலக்ட்ரான் நியுட்ரினோவும், மியுவானுக்கு இணையாக மியுவான் நியுட்ரினோவும், டவ்வானுக்கு இணையாக டவ்வான் நியுட்ரினோவும், உள்ளன. இந்த 6 துகள்களும் லெப்டான் எனப்படும் துகள் குடும்பத்தைச் சார்ந்தவை. இந்த லெப்டான் குடும்பத்திளுள்ள துகள்களுள் நியுட்ரினோக்கள் தான் எராளமாக காணப்படுகின்றன.

நியுட்ரினோவின் பிறப்பு

பிரபஞ்சம் உருவான நேரத்திலிருந்தே நியுட்ரினோக்கள் இருந்திருக்கின்றன. நட்சத்திரங்களிலிருந்தும் இவை உற்பத்தியாகின்றன. உதாரணமாக, சூரியனிலிருந்து நம் பூமிக்கு, ஒரு சதுர சென்டிமீட்டருக்கு சுமார் நாற்பது பில்லியன் நியுட்ரினோக்கள் வந்தடைகின்றன. நம் காற்று மண்டலத்திலும், பூமியின் உட்பகுதியிலும் இவை உற்பத்தியாகின்றன. நம் உடம்பும் நியுட்ரினோக்களை தயாரிக்கின்றன. நம் உடம்பிலிருக்கும் சுமார் 20 மில்லி கிராம் பொட்டாசியம்-40 -யைக் கொண்டு நாம் அனுதினமும் சுமார் 340 மில்லியன் நியுட்ரினோக்களை நம்மை அறியாமலே தயாரிக்கின்றோம்.



நியுட்ரினோ வகை மாறல்

நியுட்ரினோக்கள் மிகுதியாக காணப்படுகின்றன என்றாலும் அவற்றை ஆய்வு செய்வது மிகவும் கடினம். ஆனால் விஞ்ஞானிகள் அவற்றை கண்டறிய ஆய்வு முறைகள் கண்டுபிடித்துள்ளார்கள். நியுட்ரினோக்க ஆரம்பத்தில் எடையற்றவை என்று தான் நினைத்தனர், ஆனால் சமீபத்திய பரிசோதனைகள் அவறிற்க்கு ஒரு மிக சிறிய எடை உள்ளது என்ற ஒரு முக்கியமான கண்டுபிடிப்பை காட்டின . அதுமட்டும்மன்றி நியுட்ரினோக்கள் பயணம் செய்யும் போது தங்கள் வகையை மாற்றிக் கொள்கின்றன என்பதயும் அவை காட்டின. உதாரணத்திற்கு, சூரியனில் புறப்படும் ஒரு எலக்ட்ரான் நியூட்ரினோ பூமியை சேருகையில் தன் வகையை மாற்றி மியுவான் நியூட்ரினோவாக தெரிகின்றது. இதனை நியுட்ரினோ வகை மாறல் (Neutrino Oscillations) என்கின்றோம். இந்த நியுட்ரினோ வகை மாறல் மூலமாகவே நியுட்ரினோவிற்கு எடை உள்ளது என்பதை கண்டுபிடித்தனர். அறிவியலுக்கான நோபல் பரிசு 2௦௦2 ஆம் ஆண்டு நியூட்ரினோக்களை தொடர்பான ஆராய்ச்சிக்கு வழங்கப்பட்டது.



இந்திய நியுட்ரினோ ஆய்வுக்கூடம்

நியூட்ரினோ வகை மாறல் மூலம் நியூட்ரினோ ஆராய்ச்சி உலக அளவிலான கவனத்தை ஈர்த்தது. ஜப்பானில் உள்ள சூப்பர்-கம்யோகான்டே நியூட்ரினோ ஆய்வகம், கனடாவில் ஸட்பெரி நியூட்ரினோ ஆய்வகம், இத்தாலியில் கிரான்-சாசோ ஆய்வகம், தென் துருவத்தில் உள்ள ஐஸ் கியுப் நியூட்ரினோ ஆய்வகம் என உலகில் பல ஆய்வு கூடங்கள் உள்ளன. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படிப்பட்ட ஒரு நவீன ஆராய்சிக் கூடத்தை இந்தியாவில் கட்ட INO திட்டமிட்டது.

11வது ஐந்தாண்டு திட்டத்தில் INO ஒரு மெகா-அறிவியல் திட்டமாக அறிவிக்கப்பட்டது.

ICAL உணர்கருவி மற்றும் செய்முறை

முதல் கட்டத்தில் INO இயற்கையாகவே காற்று மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படும் நியூட்ரினோக்களை கண்டறிய ஒரு உணர்கருவியாக்கும் அமைக்கும். காற்று மண்டலத்திலிருந்து வரும் மற்ற துகள்களிலிருந்து நியூட்ரினோக்களை கண்டறிவது மிகவும் கடினம் எனவே நியூட்ரினோ ஆராய்சிக் கூடம் மலையின்னுள்ளே வைக்க வேண்டும். நியூட்ரினோக்களை எளிதாக மலை பாறையை கடந்துவிடும் மற்ற துகள்கள் மலையில் உள்ள பாறையால் வடிகட்டப்படும். ஆதலால் நியூட்ரினோக்களை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும்.

INO வில் உபயோகிக்கபடும் உணர்க்கருவியின் பெயர் "ரெசிஸ்டிவ் பிளேட் சாம்பர் " - சுருக்கமாக RPC. இரு கண்ணாடி தட்டுகளின் இடையே ஒரு வாயுவை நிரப்பி அத்தட்டுகளின் ஓரத்தை அடைத்து, இந்த RPC செய்யப்படும். ஒரு மின்னுட்டமுள்ள துகள் RPC -யை கடந்து செல்லும் போது, ஒரு குறிப்பலையை விட்டுச்செல்லும். இந்த குறிப்பலை கணிணியில் பதிவு செய்யப்படும். INO-விற்காக முன்மொழியப்பட்ட உணர்க்கருவியில் 6 சென்டிமீட்டர் தடிமனான இரும்பு தட்டுகள் ஒன்றின் மேல் ஒன்றாக மொத்தம் 150 அடுக்குகளை கொண்ட ஒரு சாதாரண அமைப்பைக் கொண்டது. இந்த இரும்புத் தட்டுகளிடையே RPC -க்கள் செருகப்படும். இத்தகைய அமைப்பை Iron Calorimeter (ICAL) என்று அழைப்பர். இந்த இரும்புத்தட்டுகள் மின்னோட்டம் ஏற்றிச்செல்லும் சுருள் கம்பிகளை கொண்டு மின்காந்தமாக்கப்படும். நியுட்ரினோக்கள் வினைபுரிதல் என்பது ஒரு மிக அரிய சம்பவம். இந்த சம்பவத்தின் நிகழ் வாய்ப்பை அதிகரிக்க ஒரே வழி: நியுட்ரினோ வினைபுரியும் பொருளின் அடர்த்தியை அதிகரிப்பதே. ஆதலால் ICAL -ல் மொத்தம் சுமார் 50,000 டன் எடையுள்ள இரும்பு தட்டுகள் உபயோகிக்கப்படும். இரும்பின் அடர்த்தி அதிகமாதலால் உணர்க்கருவியின் அமைப்பு கச்சிதமாக இருக்கும். இந்த உணர்க்கருவியானது உலகிலேயே பளூவான காந்தமாக விளங்கும்.


நியூட்ரினோ வகை மாறலை ICAL எவ்வாறு கணிக்கின்றது?

ICAL உணர்க்கருவி காஸ்மிக் துகள்களிடமிருந்து பாதுகாக்கப்படுவதால் எளிதாக நியூட்ரினோக்களை கண்டறிய முடியும். காற்று மண்டலத்தில் நியுட்ரினோக்கள் தயாரிக்கப்படும் முறையை மேலே உள்ள படத்தில் காணலாம்.



காற்று மண்டலத்தில் 2:1 என்ற விகிதத்தில் மியுவான் மற்றும் எலக்ட்ரோன் நியுட்ரினோக்கள் தயாராகின்றன. பூமியின் மேலிருந்து வரும் நியுட்ரினோக்கள் வகை மாற போதிய தூரமில்லை. ஆதலால் நியுட்ரினோக்கள் புறப்பட்ட வகையாகவே வந்து சேரும். பூமியின் கீழிலிருந்து வரும் நியுட்ரினோக்கள் வகை மாற கிட்டதட்ட 12,000 கீமி உள்ளதால் புறப்பட்ட வகையில் வந்து சேரும் சாத்தியம் குறைவு. ICAL லில் பூமியின் மேலிருந்து வரும் நியுட்ரினோக்களின் எண்ணிக்கையை பூமியின் கீழிலிருந்து வரும் நியுட்ரினோக்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு நியூட்ரினோ வகை மாறலை ICAL கணிக்கும்.

தளத்தின் இடம் மற்றும் வசதிகள்

தேனி மாவட்டத்தில் அமைக்கப்படபோகும் INO வளாகம் ஒரு மலையினுள் ஆய்வுக்கூடத்தையும் மலையின் வெளியே அலுவலகம் மற்றும் குடியிருப்புகளை கொண்டிருக்கும். மலை உச்சியிலிருந்து 1300 மீட்டருக்கு கீழ் அடுத்தடுத்து இரண்டு குகைகள் இருக்கும். ஒரு குகையில் உணர்க்கருவியும் மற்றொன்றில் கட்டுப்பாட்டு அறையும் இருக்கும். பாதுக்காப்பிற்காக இக்குகைகள் பல சுரங்கப்பாதைகள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். பிரதான குகையானது 130 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும், 30 மீட்டர் உயரமும் கொண்டிருக்கும். சார்னோகைட் பாறைகளால் ஆன மலையினுள்ளே இவை அமைக்கப்படுவதால், இவ்விடம் பாதுகாப்பாக இருக்கும். கடல் மட்டதிலிருந்து 400 மீட்டர் உயரத்தில் இந்த வளாகத்திற்கான நுழைவாயில் அமைந்திருக்கும். இந்த நுழைவாயில், உங்களை 2 கி மீ நீளமுள்ள சுரங்கப்பாதைக்கு அழைத்துச்செல்லும். இந்த சுரங்கப்பாதையானது 7 மீட்டர் அகலமும் 7 மீட்டர் உயரமும் கொண்டுள்ளதால் இருவழி வாகன போக்குவரத்து சாத்தியப்படும்.





நன்மைகள்

INO திட்டத்தின் மூலம் நாட்டின் இளைய சமுதாயம் பயனடைவார்கள். INO உபயோகிக்கப்படும் தொழில்நுட்பங்கள் மூலம் தொழில்நுட்பத்தில் வலுவான ஒரு தலைமுறை உண்டாகும். INO வில் பயன்படுத்தப்படும் உணர்க்கருவி மருத்துவத் துறையிலும் பயன்படுத்துவதை காணலாம். இந்த வகையான ஒரு திட்டம் பல்வேறு துறைகளின் ஒன்றாக்கத்திற்கு வழிவகுத்து சமுதாயத்திற்கு பல நன்மைகளை தரும். INO விற்கு மனித வளங்களில் ஒருகணிசமான முதலீடு தேவைப்படும். இயற்பியல் வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்கள் பெரிய அளவில் இத்திட்டத்திற்கு தேவை. பல்கலைக்கழகங்கள் மற்றும் இந்தியாவில் ஆராய்ச்சி நிறுவனங்கள் பல ஏற்கனவே INO குழுவில் இடம் பெற்றுள்ளன.
INO சமீபத்தில், இயற்பியலில் Ph.D பட்டம் பெற ஒரு பயிற்சி பள்ளி தொடங்கியுள்ளது. நியூட்ரினோ ஆராய்ச்சியில் மாணவர்கள் பயிற்றுவிற்கப்பட்டு பின்னர் பல்வேறு ஆராய்ச்சி/கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி செய்வர். source: http://www.ino.tifr.res.in

எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன?

ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமாம் என்பர். ஒரு அனிமேஷன் GIF விலைமதிப்பற்ற இருக்க வேண்டும்! கீழே நீங்கள் பல்வேறு வேலை, விளக்கம் மற்றும் எவ்வாறு செய்கிறது என்ற எளிய மற்றும் நேர்த்தியான அனிமேஷன் தொகுப்பு ஒன்றை காண இருக்கிறீர்கள்.


இந்த அனிமேஷன் படங்கள் நம்மை சுற்றி உலகில் நடைபெறும் செய்களின் இயக்கவியல்(mechanics) முதல் வடிவியல்(geometry) வரை விளக்க வருகிறது.இந்த அனிமேஷன் மூலம் நீங்கள் மனிதர்களின் புத்தி கூர்மை மற்றும் அறிவியல் சிந்தனையாளர்களுக்கு ஒரு பாராட்டுதலை பெற்று தரும் என்று நம்புகிறேன்.

ஜிப் எவ்வாறு வேலை செய்கிறது - How a Zipper Works



வட்டத்தின் சுற்றளவை (பய்) விளக்கும் படம் - Illustrating Pi: Unrolling a Circle’s Circumference




மாத்திரை செய்யும் இயந்திரம் எவ்வாறு இயங்குகிறது - How a Pill Press Works 
இந்த இயந்திரம் மருந்து துகள்களை ஒரு அச்சில் இருத்தி(compress) ஒரே அளவுள்ள மற்றும் ஒரே எடையுள்ள மாத்திரைகளை செய்கிறது.மாத்திரை மட்டுமின்றி, சுத்தபடுத்தும் பொருட்கள் (Cleaning products ),ஒப்பனை பொருட்கள் (cosmetics ) செய்யவும் பயன்படுகிறது. ஒரு மாத்திரை செய்ய நன்றாக தூள்படுத்தப்பட்ட மாத்திரையின் கூட்டு பொருட்களை இரண்டு அழுத்திகளுக்கு (punche) இடையில் உருவாகும் அச்சில் வைத்து, கலவை நன்றாக உருகி கலக்கும்படி பெரிய விசை கொடுத்து அழுத்தப்படுகிறது.

நீராவி இழுவையின் Walschaerts வால்வு கியர் எப்படி வேலை செய்கிறது - How Walschaerts Valve Gear in Steam Locomotives Works
1844 இல் Egide Walschaerts என்ற பொறியாளர் நீராவி எஞ்சினில் உள்ள பிஸ்டனுக்கு செல்லும் நிராவியின் அளவை சீர்படுத்த (Regulate) கண்டுபிடிக்கப்பட்டதே இந்த Walschaerts வால்வு கியர்.மேலும் இது 19 ஆம் நூற்றாண்டிலிருந்து நீராவி என்ஜின்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


என்முகம் (4D கியூப்) ஏன் இதுபோல் தெரிகிறது - What a Tesseract (4D Cube) Looks Like

வடிவியலில் என்முகம் என்பது எட்டு செல்(8-Cell ) அல்லது எட்டு கன பட்டகம் (cubic prism ) என்றும் அழைக்கலாம். கனசதுரம்(Cube ) ஆறு முகங்களை(Face ) கொண்டது. என்முகம் எட்டு முகங்களை கொண்டது. 

சதுரங்க குதிரை நகர்வு : எவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும் ஒருமுறை வந்து செல்கிறது - Knight’s Tour: How a Knight Visits Every Square Once

சதுரங்கத்தில் குதிரை காய் தொடர்ச்சியாக ஒவ்வொரு சதுரங்க கட்டத்தையும் கடந்துபோகும் . சதுரங்கத்தில் இந்த 8X8 என்ற நகர்வு இதுவரை புரியாத புதிராக உள்ளது. பொதுவாக கணணி துறை சார்ந்த மாணவர்கள் ப்ரோக்ராம் மூலம் இதுபோன்ற நகர்வுகளை கணிக்க செய்முறை பாடமாக 8X8 என்ற நகர்விருக்கு பதில் 8X10, 10X12, 12X20 என முறையற்று கொடுக்கப்படும். 

வெர்னியர் கலிப்பர் எவ்வாறு வேலை செய்கிறது - How a Caliper Works 

எவ்வாறு நிலை திசைவேக இணைப்பு வேலை செய்கிறது - How a Constant Velocity Joint Works

இந்த நிலை திசைவேக இணைப்பு (aka homokinetic or CV joints ) ஓடும் தண்டிலிருந்து (drive shaft ) சுற்றுவிசையை மாறுபட்ட கோணத்தில் இருக்கும் மற்றொரு தண்டுக்கு சீரான வேகத்தில் (constant Speed ), எந்த ஒரு உராய்வுமின்றி (no friction ) கடத்த உதவுகிறது.இவை கார்களின் சக்கரத்திற்கு எஞ்சினில் இருந்து சுற்றுவிசையை கொண்டு செல்கிறது.

கணணி விளையாட்டில் Circle strafing எவ்வாறு வேலை செய்கிறது - How Circle Strafing Works

கணணி விளையாட்டில் விளையாடுபவரையும் குறியையும்(Target) முன்னும் பின்னும் இடது வலது பக்கமாக நகர்த்தும் நுட்பத்திற்கு Strafing என்று பெயர். இதன் அடிப்படை நுட்பமே வட்டத்திற்குள் குறியை(Target ) நாம் பார்க்கும் பார்வையிலிருந்து விலக்கி தொடர்ச்சியாக நகர்த்துவது தான். 


பித்தகாரஸ் தியரத்தை மருவமைப்பு மூலம் நிருபித்தால் - Proving the Pythagorean Theorem Through Rearrangement



ஒரு ரேடியல் என்ஜின் எவ்வாறு வேலை செய்கிறது - How a Radial Engine Works



இது ஒரு முன்பின்(reciprocating ) இயக்கம் கொண்ட என்ஜினாகும். மையத்தில் உள்ள கிராங் தண்டை சுற்றி நட்சத்திர இறைக்கை வடிவில் என்ஜின் சிலிண்டர்கள் அமைந்துள்ளது. எனவே இது நட்சத்திர என்ஜின்(German Sternmotor) என்றும் அழைக்கபடுகிறது. இந்தவகை என்ஜின்கள் பொதுவாக விமானங்களில் பயன்படுத்தபடுகிறது.



ஜெனீவா டிரைவ் எப்படி இயங்குகிறது - How the Geneva Drive Works
ஜெனீவா டிரைவ் அல்லது மால்டா குறுக்கு என்றழைக்கபடும் மெக்கானிசம்(Mechanism) கியர் நுட்பத்தை கொண்டதாகும். தொடர்ச்சியான சுழற்சியை(Continuous Rotation) தடைபடும் சுழற்சியாக( Intermittent Rotary ) மாற்றி தருகிறது.சுழலும் சக்கரத்தில்(Drive Wheel) உள்ள பின் (Pin) தனது ஒரு சுழற்சியை முடிக்கும் போது அதனுடன் இணைத்துள்ள சுழற்றபடும் சக்கரத்தின்(Driven Wheel) காடியில்(Slot) நுழைந்து சுழற்றபடும் சக்கரத்தை சுற்ற வைக்கிறது. மேலும் சுழலும் சக்கரம்(Drive Wheel) தனது சுற்றை முடிக்கும் வரை சுழற்றபடும் சக்கரத்தை நழுவாமல் பிடித்துகொள்கிறது கொள்கிறது. 

ஆரம்ப காலங்களில் ஜெனீவா மற்றும் சுவிச்சர்லாந்து போன்ற நாடுகள் தங்களின் கடிகார தயாரிப்பில் இந்த நுட்பத்தை பயன்படுத்தியதால் இதற்க்கு ஜெனீவா டிரைவ் என்ற பெயர் வந்தது. மேலும் இந்த மெக்கானிசம் திரைப்பட ப்ரோஜெக்டர்களிலும் (Movie Projectors) பயன்படுத்தபடுகிறது. ப்ரோஜெக்டர்களில் படசுருள் தொடர்ச்சியாக ஓடாது.சுருளில் உள்ள ஒவ்வொரு படமும் 1/24 விநாடிகள் லென்ஸ்(Lens) முன் நின்று நின்று தான் ஓடுகிறது. இந்த ஓடத்தை தயார் செய்வது இந்த ஜெனீவா டிரைவ்.


சுற்றும் மங்கையின் மாய தோற்றம் எவ்வாறு வேலை செய்கிறது - How the Spinning Dancer Illusion Works


இது நிழல் மாயையை என்றும் அழைக்கபடுகிறது. சுற்றும் இந்த நிழல் மங்கையை சாரணமாக பார்க்கும் போது வலதுபுறமாக சுழல்வது போன்று தெரியும், சற்ற நேரம் தொடர்ந்து பார்க்கும் போது நிழல் திடீரென இடது புறமாக சுற்றுவது போல் தெரியும். சில வலைத்தளங்கள் இந்த காட்சியை வைத்து உங்கள் வல/இட பக்க மூளையின் திறனை அறியாலாம் என்று சொல்லிவருகிறன, அது தவறு. இந்த நிழல் மங்கை 2 பரிமாண (2D) அளவை மட்டும் கொண்டுள்ளதால் நம் மூளைக்கு எது இடது வலது என்று முடிவெடுப்பதில் பிரச்னை அவ்வளவு தான். மேலும் விவரம்


ஒரு உட்சில்லுரு எப்படி உருவாக்கப்படுகிறது. - How a Hypotrochoid is Made


ஆல்பா ஸ்டிர்லிங் என்ஜின் எவ்வாறு வேலை செய்கிறது - How an Alpha Stirling Engine Works

ஆல்பா ஸ்டிர்லிங் என்ஜின் ஒரு வெப்ப வகை என்ஜின், காற்று அல்லது வாயுவை ஊடகமாக கொண்ட இதில் ஊடகத்தை வெப்பமாகுதல், குளிர்வித்தல் என்ற செயல் மூலம் சுற்றுவிசை(Rotation energy) பெறப்படுகிறது. அதாவது வெப்ப ஆற்றாலை(Heat Energy ) எந்திர ஆற்றலாக (Mechanical Energy ) மாற்றபடுகிறது.





வட்டங்கள் பயன்படுத்தி ஒரு யின் யாங் சின்னம் எப்படி வரையபடுகிறது - How to Draw a Yin Yang Symbol Using Circles

ஒரு வேங்கில் என்ஜின் எவ்வாறு வேலை செய்கிறது. - How a Wankel Engine Works 
இது ஒரு உள்ளேரி என்ஜின்(Internal Combustion Engine) ஆகும். மையபிறழ்வு (Eccentric) ரோட்டரி அழுத்தத்தை சுற்று விசையாக மாற்றி தருகிறது. பிஸ்டன் கிடையாது , வால்வு கிடையாது. இதன் மூலம் சீரான சுற்று விசையை பெறலாம். இந்த என்ஜினை ஜெர்மன் பொறியாளர் பீலிக்ஸ் வேங்கில் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் 1929 ல் இதற்க்கு தனது காப்புரிமை பெற்றார்.கட்சிதமான வடிவமைப்பால் இது தானியங்கிகள், விமானங்கள், ரேஸ் கார்கள் , ஸ்நொவ் மொபைல் , செயின் ஷா போன்றவற்றில் பயன்படுகிறது

வாகனங்களில் எரிபொருட்களின் சக்தி 80% வீணாகபோவது தெரியுமா ?

வாகனங்களில் நாம் பயன்படுத்தும் எரிபொருளில் (பெட்ரோல் அல்லது டீசல்) சுமார் 15% இருந்து 26% ஆற்றல் தான் வாகனத்தை இயக்க பயன்படுத்தபடுகிறது, மீதமுள்ள ஆற்றல் என்ஜினில் வெப்ப ஆற்றலாக வீணாகிறது. என்ஜினில் வீணாகும் வெப்ப ஆற்றலை நேரடியாக இயந்திர ஆற்றலாக (Mechanical Energy) மாற்ற சொல்லும் அளவிற்கு எந்த ஒரு நுட்பங்களும் (Technology) கண்டுபிடிக்கப்படவில்லை. ஆற்றலை இழப்பை மேம்பட்ட நுட்ப பாகங்கள்/சாதனங்கள் மூலம் குறைக்க முடியும் என்று நிலையில் தான் நவீன நுட்பம்(Technology) உள்ளது. சரி வாகனங்களில் எந்த வகைகளில் ஆற்றல் இழப்புகள் உண்டாகின்றது, அதை எந்த வகையில் குறைக்க முடியும் என்று பார்க்கலாம்.
என்ஜின் இழப்பு - 62.4%
பெட்ரோலில் இயங்கும் வாகனங்களில் 62% எரிபொருள் ஆற்றல் இஞ்ஜின் மூலம் வீணாக்கபடுகிறது. தற்போதுள்ள என்ஜின்கள் எரிபொருளில் இருக்கும் வேதி ஆற்றலை மூழுமையாக இயந்திர ஆற்றலாக மாற்றக்கூடிய திறன் கிடையாது. எஞ்சினில் ஏற்படும் உராய்வு, காற்றை இழுக்க/தள்ள மற்றும் பாகங்களின் நிறை போன்ற காரணிகளால் பெருமளவு வெப்ப ஆற்றல் வீணாகிறது. மாறுபட்ட வால்வு நேர இயக்கம் , டர்போசார்ஜிங், நேரடி எரிபொருள் செலுத்தம் மற்றும் உருளை முடக்கம் போன்ற மேம்பட்ட நுட்பவியல் என்ஜின்கள் மூலம் ஒரளவிற்க்கு வெப்ப இழப்பு குறைக்கபடுகிறது. இந்தவகையில் டீசல் என்ஜின்கள் பெட்ரோல் எஞ்சின்களை காட்டிலும் சுமார் 30-35% அதிக திறன் கொண்டவை.

வெறும (Idle) இழப்புகள் - 17.2 சதவிகிதம்
நகர்ப்புறங்களில் வாகனத்தை ஓடும் போது ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளில் (Traffic) வெறுமனே எஞ்சின் ஓடுவதால் குறிப்பிட்ட அளவு ஆற்றல் வீணாகிறது. வெறுமனே ஓடும் எஞ்சினை அனைத்து வைத்தும், ஆக்ஸிலரேட்டரை அழுத்தும் போது எஞ்சினை இயக்கும் மேம்பட்ட நுட்பவியல் சாதனங்கள் மூலம் இந்த இழப்பும் சிறு அளவு மட்டுமே குறைக்கமுடியும்.

உதிரி பாகங்களால்( Accessories) இழப்புகள் - 2.2 சதவிகிதம்
ஏர் கண்டிஷனிங், பவர் ஸ்டீயரிங், கண்ணாடி வைப்பர் போன்ற பாகங்கள் தனக்கு வேண்டிய ஆற்றலை என்ஜினில் இருந்து தான் எடுத்துக்கொள்கின்றன. இதனால் ஏற்படும் 2.2% இழப்பை மேம்பட்ட சாதனங்கள் மூலம் 1% அளவு குறைக்க முடியும்.

ஓட்டவழி (DriveLine) இழப்புகள் - 5.6 சதவிகிதம்
என்ஜினில் இருந்து இயக்க ஆற்றல் வாகனத்தின் பல பாகங்களுக்கு கொண்டு செல்லும் போது இந்தவகை இழப்பு ஏற்படுகிறது. 

காற்றியக்கவியல் தடை (Aerodynamic Drag) இழப்புகள் - 5.6 சதவிகிதம்
பொதுவாக வாகனம் தனது ஆற்றலை வைத்து தான் காற்றை கிழித்து கொண்டு செல்கிறது. வாகனம் குறைவான வேகத்தில் செல்லும் போது காற்றினால் ஏற்படும் தடை மற்றும் காற்றை கிழிக்கும் செல்லும் ஆற்றல் தேவை குறைவாகவும் , வேகம் அதிகரிக்கும் போது தடை மற்றும் காற்றை கிழிக்கும் ஆற்றல் அதிகமாகவும் தேவைப்படுகிறது. மேலும் வாகனத்தின் வடிவமும் இந்த ஆற்றல் இழப்பில் முக்கிய பங்கு வகுக்கிறது. இந்த இழப்பை சரிசெய்ய வாகனத்தின் முகப்பு வடிவம் காற்றினால் ஏற்படும் தடையை சமாளிக்கும் வகையில் கூர்மையாக வடிவமைக்கப்படுகிறது. இதனால் சுமார் 20% இருந்து 30% இழப்புகள் சரிசெய்யபடுகிறது.


உருள்தடுப்பு (Rolling Resistance) இழப்புகள் - 4.2 சதவிகிதம்
வாகனத்தின் நிறையினால் சக்கரங்களுக்கும் சாலைக்கும் இடையே ஏற்படும் உராய்வு மூலம் கணிசமான அளவு ஆற்றல் விராயமாகிறது. சக்கரத்தின் டயர்களில் உள்ள அச்சு வரிகளில் (Tread) சில மாற்றங்களை செய்வதன் மூலம் ஒரளவிற்க்கு இதை சமாளிக்கலாம்.


தடை(Break) இழப்புகள் - 5.8 சதவிகிதம்

வாகனத்தை இருக்கும் இடத்தில் இருந்து நகர்த்தும் போது வாகனத்தின் நிலைம(Inertia) நிறையை மீட்டு தான் நகர ஆரம்பிக்கும், அவ்வாறு மீட்டு நகவதற்க்கு அதிகளவு ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த ஆற்றல் விரயம் வாகனத்தில் நிறைக்கு(Weight) ஏற்றவாறு மாறுபடும். குறைவான நிறைக்கொண்ட வாகனங்களில் இந்த இழப்பு குறைவாகவும், அதிகளவு நிறைக்கொண்ட வாகனங்களில் இழப்பு அதிகமாகவும் இருக்கும். எனவே மேம்படுத்தபட்ட நுட்பவியல் மூலம் வாகனத்தின் நிறையை குறைத்து இழப்பை கொஞ்சம் சரிகட்டலாம். 


இப்போது தெரிகிறதா உலகத்தில் இருக்கும் எரிபொருள் வளம் எவ்வாறு வீண்ணடிக்கபடுகிறது என்று. என்ஜினில் மட்டுமே 62% எரிபொருள் ஆற்றல் வீணாகிறது. இதைமட்டுமாவது அறிவியல் அறிஞர்கள் புதிய கண்டுபிடிப்பு மூலம் குறைத்தால் நமக்கு எவ்வளவு எரிபொருள் மிச்சம். இப்படி மாதம் மாதம் உலகளவில் ஏறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றதை முழுவதுமாக குறைக்கலாம். அதை சார்ந்த அனைத்து பொருள்களின் விலையும் கட்டுபாட்டில் இருக்கும். யாருக்கு தெரியும் ஒருவேளை மக்களை வாங்க வைத்து லாபம் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட மேலைவர்க்கத்தினர் இழப்பை சரிசெய்யும் நுட்பம் தெரிந்தும் தெரியாதது போல் உள்ளனரோ என்னவோ (மின்விளக்கு கதைபோல)